மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி பெற கர்நாடகா முதல்வர் டெல்லி பயணம்

மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி பெற கர்நாடகா முதல்வர் டெல்லி பயணம்
கர்நாடக முதல்வர் எடியூரப்பா.
  • News18
  • Last Updated: September 15, 2020, 2:01 PM IST
  • Share this:
காவிரிக்கு குறுக்கே கட்டப்படும் மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி பெறுவதற்கு, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான குழு டெல்லி செல்லவிருப்பதாக, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில், ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்கு புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பெங்களூருக்கு குடிநீர் வினியோகிக்கவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது வரை திட்ட அனுமதிக்கு ஒப்புதல் வழங்கவில்லை.


Also read... மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வழக்கு: தீபக் தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்தது நீதிமன்றம்..

இந்தநிலையில் மேகதாது பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அம்மாநில நீர்வள அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, இத்திட்டத்துக்கு அனுமதி பெறுவதற்கு, செப்டம்பர் 16 அல்லது 17 தேதிகளில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து வலியுறுத்தவுள்ளதாக தெரிவித்தார் .

இது தொடர்பாக முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் குழு அமைத்து, டெல்லி செல்ல திட்டமிட்டடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகு, உடனடியாக அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
First published: September 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading