முகப்பு /செய்தி /இந்தியா / மாணவியின் ஹால் டிக்கெட்டில் சன்னி லியோனின் கவர்ச்சி படம்.... பிரவுசிங் சென்டரில் போட்டோ அப்ளை பண்ணும்போது உஷார்

மாணவியின் ஹால் டிக்கெட்டில் சன்னி லியோனின் கவர்ச்சி படம்.... பிரவுசிங் சென்டரில் போட்டோ அப்ளை பண்ணும்போது உஷார்

ஹால் டிக்கெட்டில் சன்னி லியோனின் புகைப்படம்

ஹால் டிக்கெட்டில் சன்னி லியோனின் புகைப்படம்

விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது பிரவுசிங் சென்டரில் புகைப்படம் தவறுதலாக மாறி அப்லோட் ஆகியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா மாநிலத்தில் தேர்வு ஹால்டிக்கெட்டில் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படத்திற்குப் பதிலாக நடிகை சன்னி லியோனின் படம் இடம்பெற்று பரபரப்பை கிளப்பியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் அன்மையில் ஆசிரியர் தகுதித் தேர்வு டெட் 2022 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு அங்குள்ள ருத்ரப்பா கல்லூரியில் தேர்வு எழுத வந்த மாணவியின் ஹால்டிக்கெட்டை பார்த்து அங்கிருந்த கண்காணிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காரணம் ஹால்டிக்கெட்டில் மாணவியின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் சன்னி லியோனின் புகைப்படம் இருந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணும் தேர்வர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசிடம் புகாரின் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் அளித்த தகவலை வைத்து விசாரித்ததில், அந்த பெண் தனக்கு தெரிந்தவரிடம் விண்ணப்பப்படிவத்தை ஆன்லைனில் நிரப்ப தெரிவித்துள்ளார். அப்போது பிரவுசிங் சென்டரில் புகைப்படம் மாறி அப்லோட் ஆகியிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு கர்நாடகா கல்வித்துறை மீது எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தேர்வர் அப்லோட் செய்யும் புகைப்படத்தை கம்யூட்டர் அப்படியே எடுத்துக்கொள்ளும் இதில் கல்வித்துறை ஏதும் செய்ய முடியாது என பாஜக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க: லேப்டாப் வைத்திருந்ததால் ரூ.10 கூடுதல் கட்டணம்.. அரசு பேருந்தில் அதிர்ச்சி.!

top videos

    இனி தேர்வர்கள் தங்கள் விண்ணப்பத்தை தாங்களே பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள கல்வித்துறை, புகைப்படத்தை அப்லோட் செய்யும் போது கவனம் தேவை என்றுள்ளது. அம்மாநிலத்தில் டெட் தேர்வு நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதில் 3.3 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர்.

    First published:

    Tags: Actress Sunny Leone, Karnataka, Sunny Leone