பக்தர்கள் ஆரத்தி தட்டில்போடும் காணிக்கைகளை அர்ச்சகர்கள் எடுக்க தடை: கர்நாடக அரசு

கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு 6-வது ஊதிய குழு அடிப்படையில் சம்பள உயர்வு உள்பட பல சலுகைகள் வழங்கப்படும்.

news18
Updated: July 2, 2019, 11:08 AM IST
பக்தர்கள் ஆரத்தி தட்டில்போடும் காணிக்கைகளை அர்ச்சகர்கள் எடுக்க தடை: கர்நாடக அரசு
கோப்புப் படம்
news18
Updated: July 2, 2019, 11:08 AM IST
கோயில்களில் ஆரத்தி தட்டில் பக்தர்கள் தரும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க தடை விதித்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் 34,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. கோயில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு வழங்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

மேலும், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கிவரும் கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு வழங்கியுள்ள மாநில அரசு, கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆரத்தி கொண்டுவரும்போது தட்டில் போடும் காணிக்கையை எடுக்கக்கூடாது என்று தடை போட்டுள்ளது.

இது தொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்ட அரசாணையில், கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு 6-வது ஊதிய குழு அடிப்படையில் சம்பள உயர்வு உள்பட பல சலுகைகள் வழங்கப்படும்.

அதே சமயத்தில் பக்தர்கள் ஆரத்தி தட்டில்போடும் காணிக்கைகளை அர்ச்சகர்கள் எடுத்து பயன்படுத்தாமல் கோயில் வருமானத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...

First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...