Home » News » National » KARNATAKA SPEAKER BUYS TIME FOR KUMARASWAMY GOVT SAYS MLAS WILL HAVE TO RESIGN IN PERSON SKD

கர்நாடகா அரசியல் குழப்பம் - எம்.எல்.ஏக்கள் ராஜினாமா - சபாநாயகர் விளக்கம்

இந்த விவகாரத்தில் மனசாட்சி உள்ள ஒரு மனிதராக நான் நடந்துகொள்ள வேண்டும். நான், மிகச் சாதரண பின்னணியில் இருந்துவந்தவன். மிக முக்கியமான பொறுப்பில் உள்ளேன்.

கர்நாடகா அரசியல் குழப்பம் - எம்.எல்.ஏக்கள் ராஜினாமா - சபாநாயகர் விளக்கம்
கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார்
  • News18
  • Last Updated: July 9, 2019, 7:44 PM IST
  • Share this:
கர்நாடகாவைச் சேர்ந்த ராஜினாமா கடிதம் அளித்த 14 எம்.எல்.ஏக்களும் நேரில் வந்து கடிதம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. மொத்தமுள்ள 224 எம்.எல்.ஏக்களில் 116 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் தற்போதைய ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். இது கர்நாடகா அரசில் மிகப் பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், 14 பேரின் ராஜினாமாவை ஏற்பதும், நிராகரிப்பதும் சபாநாயகரின் கையில் உள்ளது. எனவே, அவருடைய முடிவை கர்நாடக அரசியலைத் தீர்மானிக்கும் ஒன்றாக உள்ளது.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார், ‘நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் வரலாற்றில் இடம்பெறும். எனவே, நான் எந்தத் தவறும் செய்துவிடக் கூடாது. எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளலாமா? அல்லது அதில் வேறு முடிவு எடுக்கலாமா என்பது குறித்து மூத்தவர்களுடன் ஆலோசனை செய்யவேண்டும். விதிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். எதிர்காலத் தலைமுறை என்னை குற்றவாளியாக பார்த்துவிடக் கூடாது.

இந்த விவகாரம் தொடர்பாக, இன்றே முடிவு எடுக்கிறேனா அல்லது இரண்டு வருடம் கழித்து முடிவு எடுக்கிறேனா என்பது தேவையற்ற ஒன்று. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நான் முடிவெடுக்க வேண்டும். அதுதான் முக்கியம். அரசியல்சாசனத்தின் விதிகளைப் பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் மனசாட்சி உள்ள ஒரு மனிதராக நான் நடந்துகொள்ள வேண்டும். நான், மிகச் சாதாரண பின்னணியில் இருந்துவந்தவன். மிக முக்கியமான பொறுப்பில் உள்ளேன்.

என்னால் அநீதி இழைக்க முடியாது. சபாநாயகர் இருக்கைக்கு, என்னால் அவமரியாதையை ஏற்படுத்த முடியாது. எல்லாவற்றையும் அஞ்சல் மூலம் செய்ய முடியும் என்றால், நான் எல்லாவற்றுக்கும் தேவைப்பட மாட்டேன்’ என்று தெரிவித்தார். எம்.எல்.ஏக்கள் நேரில் வந்து ராஜினாமா கடிதத்தை தர வேண்டும் என்று மறைமுகமாக தெரிவித்தார்.Also see:

First published: July 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading