Home /News /national /

3 நாகப்பாம்பு வைத்து சாகசம் செய்ய முயன்ற நபருக்கு விபரீதம்...

3 நாகப்பாம்பு வைத்து சாகசம் செய்ய முயன்ற நபருக்கு விபரீதம்...

பாம்புகளை வைத்து சாகசம்

பாம்புகளை வைத்து சாகசம்

Cobra attack: பாம்புகளை வைத்து மாஸ் சயீத் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஒரு நாகம்( poisonous Snake) அவரது இடது பக்க தொடையில் தீண்டியது.  இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

    கர்நாடகாவில் பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர்  3 பாம்புகளை வைத்து வித்தைகாட்டும் விபரீத முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவரை நாகம் தீண்டியது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இன்றைய சமூக ஊடக காலத்தில், தாங்கள்  விரைவில் புகழடைய வேண்டும் என்பதற்காக தங்களின் திறமையை வெளிப்படுத்தி பலரும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவது வாடிக்கையான ஒன்று. சிலர் தங்களது சாகச வீடியோக்களை இதுபோல் பதிவிடுவது இன்று. அவ்வாறு சாகசத்தில் ஈடுபடும்போது சில வேளைகளில் அவர் விபரீதத்தில் முடிவதும் உண்டு. அத்தகைய சம்பவம் தான் கர்நாடகாவில் நடந்தேறியுள்ளது.

    கர்நாடகாவைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான மாஸ் சயீத் (Maas Syed)  அடர்ந்த காட்டுப்பகுதியில்  அமர்ந்துகொண்டு மூன்று விஷ பாம்புகளை வைத்து சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அவர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். பாம்புகளை வைத்து அவர் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஒரு நாகம் அவரது இடது பக்க தொடையில் தீண்டியது.  இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



    மாஸ் சயீத்தை பாம்பு கடிக்கும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்தா நந்தா  ‘இது நாகப்பாம்புகளைக் கையாளும் பயங்கரமான வழி...
    பாம்பு அசைவுகளை அச்சுறுத்தலாக உணர்வதோடு அவற்றை பின்பற்றுகிறது.  சில நேரங்களில் அவற்றின் பதில் ஆபத்தானதாக இருக்கலாம் ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Karnataka, Snake

    அடுத்த செய்தி