கர்நாடகாவில் கோரவிபத்து: பிரசவத்திற்காக சென்ற கர்ப்பிணி உட்பட 7 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் குல்பர்காவில் நடந்த விபத்து

கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் பிரசவத்திற்காக கர்ப்பிணியை அழைத்துச்சென்றபோது நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

 • Share this:
  25 வயது இர்பனா பேகம் என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இர்பனா பேகத்திற்கு பிரசவ வலி ஏற்பட்டத்தை அடுத்து குடும்ப உறுப்பினர்கள் அவரை சொகுசு காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கார் சவலாகி என்ற இடத்தில் சென்ற போது சாலையின் ஓரத்தில் நின்றிருந்த சரக்கு லாரியின் மீது மோதியதாக கூறப்படுகிறது. மோதிய வேகத்தில் கார் மற்றும் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில், காரில் பயணித்த கர்ப்பிணி உட்பட 7 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

  மேலும் படிக்க...தமிழக அரசு தள்ளுபடிசெய்த கடனை விவசாயிகளைத் திரும்ப செலுத்த கட்டாயப்படுத்தும் வங்கி நிர்வாகம்  விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்தில் குல்பர்கா காவல் ஆணையர் ஆய்வு செய்தார். பிரசவத்திற்காக சென்ற போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: