• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கர்நாடகாவில் இரண்டு சிறுவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று; பார்வை இழக்கும் அபாயம்!

கர்நாடகாவில் இரண்டு சிறுவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று; பார்வை இழக்கும் அபாயம்!

கருப்பு பூஞ்சை

கருப்பு பூஞ்சை

இரண்டு சிறுவர்களும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அதனை சிறுவர்களின் பெற்றோர்கள் உணரவில்லை.

  • Share this:
    நாட்டில் முதல்முறையாக கர்நாடகாவில் இரண்டு சிறார்களுக்கு கருப்பு பூஞ்சை நோய்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் கருப்பு பூஞ்சை அல்லது மியூகோர்மைகோசிஸ் என்று அழைக்கப்படும் தொற்றுநோய், கொரோனா பாதித்தவர்களிடையே அதிகரித்து வருகிறது. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோர், சர்க்கரை நோயாளிகள், அதிக ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொள்வோர், மூச்சுவிட சிரமப்படுவோர், கொரோனாவால் பாதித்தோர், கீமோதெரபி சிகிச்சை பெறுவோர் உள்ளிட்டவர்கள் இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நாட்டில் முதல்முறையாக கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட இரண்டு சிறார்களுக்கு இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியும், சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆவார்கள். தற்போதைய நிலவரப்படி இரண்டு சிறார்களும் ஒவ்வொரு கண்களை இழக்க நேரிடும் என மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.

    இதுதொடர்பாக மூத்த சுகாதாரத்துறை அதிகாரி கூறும்போது, கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர்களில் ஒருவர் அரசு பவுரிங் மருத்துவமனையிலும், மற்றொருவர் லேடி கர்சன் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரும் சிறார் நீரிழிவு (Acute Juvenile Diabetes) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Also read: கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 80வயது முதியவர் - கருப்பு பூஞ்சை பயத்தால் தற்கொலை செய்துக்கொண்ட பரிதாபம்

    மேலும், இரண்டு சிறுவர்களும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அதனை சிறுவர்களின் பெற்றோர்கள் உணரவில்லை. சிறுவர்களின் உடல்நிலை மோசமடைந்த நிலையிலே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் இதுவரை 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 1,193 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 39 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: