• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • எடியூரப்பாவை நீக்க சதி நடக்கிறது, அவர் இல்லையென்றால் பாஜக இல்லை: சுப்பிரமணியன் சுவாமி

எடியூரப்பாவை நீக்க சதி நடக்கிறது, அவர் இல்லையென்றால் பாஜக இல்லை: சுப்பிரமணியன் சுவாமி

எடியூரப்பா

எடியூரப்பா

கர்நாடக முதல்வராகக் கடந்த இரு ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் பி.எஸ். எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜக கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனையடுத்து அவர் இல்லாவிட்டால் கர்நாடகாவில் பாஜக இல்லை என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் எடியூரப்பாவை பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் விமர்சித்து வருகின்றனர்.

  78 வயது ஆகிவிட்டதால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முதல்வராக அமர்த்த வேண்டும் எனக் கூறி எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர். இதனால் பாஜக மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங் கடந்த மாதம் பெங்களூருவில் அதிருப்தியாளர்களைச் சமாதானப்படுத்தினார்.

  இந்நிலையில் எடியூரப்பா தனது மகன் விஜயேந்திராவுடன் கடந்த வாரம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது தான் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக பிரதமர் மோடியிடம் எடியூரப்பா கூறியதாகத் தெரிகிறது.

  சுப்பிரமணியன் சுவாமி


  எடியூரப்பா ஆதரவாளர்கள் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கி இருப்பதால், அவர்களைச் சமாதானம் செய்யும் வகையில் நேற்று ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவர் பதிவிட்ட கருத்தில், “பாஜகவின் உண்மையான தொண்டனாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்த கட்சிக்கு சேவை செய்வது எனது மிகப்பெரிய கடமை. கட்சிக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். யாரும் எவ்விதமான போராட்டத்திலோ இல்லை மரியாதைக் குறைவான செயல்களிலோ ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

  Also Read: ஆர்.எஸ்.எஸ் தலைவருக்காக சாலையை சீரமைக்க உத்தரவிட்ட மதுரை உதவி ஆணையர் விடுவிப்பு

  இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி கூறும்போது, “கர்நாடகாவில் முதன்முதலில் பாஜக ஆட்சியைக் கொண்டுவந்தவர் எடியூரப்பா. அவரை நீக்க சதி நடக்கிறது. அவர் இல்லாமல் மாநிலத்தில் பாஜகவை நடத்த முடியாது. பாஜகவுக்கு மீண்டும் எடியூரப்பா வந்தபின்தான் வெற்றி பெற முடிந்தது. எதற்காக மறுபடியும் அதே தவறைச் செய்கிறீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: