கர்நாடகாவில் எடியூரப்பா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

”நிதி மசோதாவிற்கு மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்”

news18
Updated: July 29, 2019, 7:48 AM IST
கர்நாடகாவில் எடியூரப்பா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!
எடியூரப்பா
news18
Updated: July 29, 2019, 7:48 AM IST
கர்நாடகவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் எடியூரப்பா சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதவீதம் வெற்றி பெறுவேன் என்று எடியூரப்பா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து புதிய முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். அவர் தனது அரசு மீதான பெரும்பான்மையை சட்டப்பேரவையில் இன்று நிரூபிக்க உள்ளார். இதுதொடர்பாக பெங்களுருவில் உள்ள சான்செரி நட்சத்திர விடுதியில் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம் என்றார்.


”பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் நாளை (இன்று) நடைபெறும் அலுவல்கள் குறித்து ஆலோசித்தோம். நாளை (இன்று) நம்பிக்கை தீர்மானத்தை கொண்டுவர உள்ளேன். அதற்கு பின் நிதி மசோதாவை அறிமுகப்படுத்துவேன். இந்த விவகாரத்தில் (நிதி மசோதாவிற்கு )காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என நினைக்கிறேன்” என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த பின் நிதி மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் முந்தைய குமாரசாமி அரசு தயாரித்த வடிவத்திலேயே நிதி மசோதா இருக்கும் என்றும் எடியூரப்பா தெரிவித்தார். இந்த மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும்படி காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...