ஹோம் /நியூஸ் /இந்தியா /

‘ஆறு கோடி மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்’! ராஜினாமா செய்கிறாரா குமாரசாமி

‘ஆறு கோடி மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்’! ராஜினாமா செய்கிறாரா குமாரசாமி

குமாரசாமி

குமாரசாமி

தவறுகளை சரி செய்யும் நேரம். நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நன்றி. ஆறு கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

 • 1 minute read
 • Last Updated :

  கர்நாடகா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  கர்நாடகாவில் ஆளும் அரசைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்தனர். அதனையடுத்து, குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து,

  கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கடந்த 18-ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

  அதன் மீதான விவாதத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். 3 நாட்களாக நடைபெறும் விவாதத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் நேற்று நள்ளிரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்தார். இருப்பினும், நம்பிக்கை வாக்கெடுப்பு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  இந்தநிலையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. கூட்டத்தொடரில் பேசிய அவர், ‘தவறுகளை சரி செய்யும் நேரம். நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நன்றி. ஆறு கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று உருக்கமாக பேசினார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே அவர் ராஜினாமா செய்யவுள்ளார் என்று தெரிகிறது.

  இந்தநிலையில், பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பார், ஹோட்டல்களை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  ஊரடங்கு உத்தரவு குறித்து பேசிய பெங்களூரு நகர காவல்துறை ஆணையாளர் அலோக் குமார், ‘இன்றும் நாளையும் பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லா பார்களும், 25-ம் தேதி வரை மூடப்படும். யாரேனும் விதியை மீறினால், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: HD Kumaraswamy