எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Karnataka Political Crisis | எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசுக்கு எதிராக வாக்களிப்பதை தடுக்க, அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

news18
Updated: July 16, 2019, 3:10 PM IST
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு!
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
news18
Updated: July 16, 2019, 3:10 PM IST
கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினர்.

மேலும், சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனால், அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் மறுத்ததை அடுத்து, அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர்.

இதற்கிடையே, நாளை மறுநாள் குமாரசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

இந்நிலையில், ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது. சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Loading...

இதனால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யவும் தடை இல்லை. ராஜினாமாவை நிராகரிக்கவோ, ஏற்கவோ தடை இல்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தால் அல்லது ராஜினாமா செய்தால் பெரும்பான்மைக்கு தேவையான எண்கள் குறையும்.

இதனால், எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசுக்கு எதிராக வாக்களிப்பதை தடுக்க, அவர்கள் தகுதி நீக்கம் அல்லது ராஜினாமா ஏற்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

எப்படி பார்த்தாலும் குமாரசாமியின் அரசுக்கு சிக்கல் நீடிக்கவே செய்கிறது.உச்ச நீதிமன்றத்தில் இந்த உத்தரவால் கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...