போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்த கர்நாடக காவல்துறை புதிய முயற்சி!

இனி செய்திகளின் உண்மைத்தன்மையை 'factcheck.ksp.gov.in’ எனும் தளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம் என அம்மாநில காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்த கர்நாடக காவல்துறை புதிய முயற்சி!
(கோப்புப்படம்)
  • Share this:
கொரோனா காலத்தில் பரவும் வதந்திகளைக் கட்டுப்படுத்த கர்நாடக காவல்துறை தனது இணைதளத்தில் புதிய பக்கத்தைத் தொடங்கியுள்ளது.

ஒருபக்கம் கொரோனா வேகவேகமாகப் பரவும் சூழலில், மறுபக்கம் இதுகுறித்த வதந்திகளும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கர்நாடக மாநில காவல்துறை தனது இணையதளத்தில் புதிய பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளது.

இனி செய்திகளின் உண்மைத்தன்மையை 'factcheck.ksp.gov.in’ எனும் தளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம் என அம்மாநில காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுவரை 9 செய்திகளின் உண்மைநிலை அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இன்றுமுதல் அந்த இணையதளம் பயன்பாட்டுக்கு வந்திருப்பதாகக் கூறிய காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், கொரோனா விவகாரத்தையொட்டி மக்களின் அமைதியைக் குலைக்கும் வகையில் போலிச் செய்திகளுடன் வீடியோக்கள், புகைப்படங்கள் பல சமூக ஊடகங்களில் உலவுவதாகவும் அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், பலர் கண்ணை மூடிக்கொண்டு தங்களின் வட்டத்தில் அதைப் பகிர்ந்து வருவதால் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

Also see:
First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading