Home /News /national /

இப்படியும் மூட நம்பிக்கைகளா...? சூரிய கிரகணத்தின் போது குழந்தைகளை மண்ணில் புதைத்த தாய்மார்கள்...!

இப்படியும் மூட நம்பிக்கைகளா...? சூரிய கிரகணத்தின் போது குழந்தைகளை மண்ணில் புதைத்த தாய்மார்கள்...!

குழந்தையை மண்ணில் புதைத்த தாய்மார்கள்

குழந்தையை மண்ணில் புதைத்த தாய்மார்கள்

Solar Eclipse |

  • News18
  • Last Updated :
    சூரிய கிரகணத்தின் போது மூட நம்பிக்கைகள் காரணமாக குழந்தைகளை அவர்களது தாய்மார்கள், கழுத்துவரை மண்ணில் புதைத்து வைத்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

    பூமியின் துணைக்கோளான நிலவு, பூமியை நீள்வட்டபாதையில் சுற்றி வருகின்றது. அதேபோல், சூரியனை, பூமி நீள்வட்டபாதையில் சுற்றி வருகிறது. இந்த இயற்கையான நிகழ்வில், சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது கிரகணம் ஏற்படுகிறது.

    சூரியனுக்கும் பூமிக்கு இடையில் நிலவு வரும்போது, நிலவு, சூரியனை மறைக்கிறது. இதனால், நிலவின் நிழல் பூமியில் விழும்போது, சூரியன் மறைந்துபோகிறது. இதைத்தான் சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.

    இந்நிலையில், சூரிய கிரகணத்தின் போது கர்நாடகாவில் 10 வயதுக்குட்பட்ட சில சிறுவர்கள் கழுத்துவரை மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

    கர்நாடகாவின் கல்புர்கி பகுதியில் உள்ள தாஜ்சுல்தான்புர் என்னும் இடத்தில் 10 வயதுக்குட்பட்ட சிலசிறுவர்கள் கழுத்துவரை மண்ணில் புதைக்கப்பட்டனர். சூரிய கிரகணத்தின் போது இப்படி செய்தால், குழந்தைகளுக்கு தோல் நோய் ஏற்படாது என்றும், உடல் ஊனம் ஏற்படாது என்றும் அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    ஆனால், அறிவியல்ரீதியில் இதுபோல எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில், மக்களிடையே நிலவும் மூட நம்பிக்கைகள் மற்றும் தவறான தகவல்களால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
    Published by:Sankar
    First published:

    Tags: Solar eclipse

    அடுத்த செய்தி