Home /News /national /

ஒரே ஒரு போன் போதும்..வீட்டிற்கே வரும் சலூன் கடை-வைரல் புகைப்படம்

ஒரே ஒரு போன் போதும்..வீட்டிற்கே வரும் சலூன் கடை-வைரல் புகைப்படம்

சலூன் கடையை வீட்டிற்கே கொண்டு வரும் கர்நாடகாவை சேர்ந்த சலூன் கடைக்காரர் பற்றி தெரியுமா?

சலூன் கடையை வீட்டிற்கே கொண்டு வரும் கர்நாடகாவை சேர்ந்த சலூன் கடைக்காரர் பற்றி தெரியுமா?

சலூன் கடையை வீட்டிற்கே கொண்டு வரும் கர்நாடகாவை சேர்ந்த சலூன் கடைக்காரர் பற்றி தெரியுமா?

கொரோனா பரவல் காரணமாக முடங்கிய பல தொழில்களில் முக்கியமான ஒரு தொழில் முடிதிருத்தம் செய்யும் தொழில். இதனிடையே கர்நாடகாவில் ஹேர்கட் உள்ளிட்ட சலூன் சேவைகள் வழங்கும் தொழில் ஈடுபட்டு வரும் 32 வயதான ஷிவப்பாவின் வித்தியாசமான செயல் உள்ளூர் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரே ஒரு கால் செய்தால் போதும் வீட்டு வாசலுக்கே வந்து விரும்பிய சலூன் சேவைகளை மக்களுக்கு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் வரும் போது இவர் மட்டுமல்ல, சலூன் கடையையும் சேர்த்தே கையோடு கூடி வந்துவிடுகிறார்.

ஆம் ஒரு சிறிய ரக கூட்ஸ் ஆட்டோவை தற்காலிக சலூன் ரூமாக மாற்றி ரீடிசைன் செய்து கொண்டு கர்நாடகாவின் சிக்கமகளூர் மாவட்டம் மற்றும் அதன் அண்டை இடங்களில் உள்ள மக்களுக்கு ஷேவிங், கட்டிங் உட்பட அவர்கள் எதிர்பார்க்கும் சலூன் சேவைகளை வீட்டு வாசலுக்கே சென்று வழங்கி வருகிறார் ஷிவப்பா. நடமாடும் சலூன் பற்றிய இந்த புதுமையான யோசனை ஒரு வெளிநாட்டவரின் ஃபேஸ்புக் ஃபோட்டோவை பார்த்து வந்ததாக கூறி இருக்கிறார் தற்போது வெற்றிகரமான தொழில்முனைவராக இருக்கும் ஷிவப்பா.

தன்னை பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார் ஷிவப்பா. சிக்கமகளூரில் சலூன் ஒன்றில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முடிதிருத்தும் வேலையை செய்து வந்துள்ளார். படிக்க விருப்பம் இல்லாததால் 10 வயதில் ராய்ச்சூரிலிருந்து சிக்கமகளூருக்கு வந்ததாகவும், இங்கு கட்டி கொடுத்திருந்த சகோதரி வீட்டில் தங்கி பெலூர் சாலையில் உள்ள ஒரு சலூனில் வேலை செய்யத் தொடங்கியதாக் கூறியுள்ளார். ஒன்றரை ஆண்டுகளை வரை எவ்வித சிக்கலும் இன்றி நல்லபடியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கை கோவிட் காரணமாக பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். இவரது மனைவி ஒரு பியூட்டி பார்லரில் பணிபுரிகிறார், தம்பதியருக்கு 11 வயது மகள் உள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக அவர் வேலை பார்த்த சலூன் மூடப்பட்டது. சலூன் வேலையே தவிர்த்து வேறு எந்த வேலையும் தெரியாத ஷிவப்பாவின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் தனது மொபைல் சலூனுக்கு முன் ஒருவர் போஸ் கொடுத்த ஃபோட்டோவை கண்டதும், தானும் அதே போல ஒரு நடமாடும் சலூனை ஏற்படுத்துவது குறித்து தீவிரமாக யோசித்தார். பின்னர் சொந்த தொழில் துவங்க இது தான் சரியான நேரம் என்று நினைத்த ஷிவப்பா, நிதி நிறுவனம் ஒன்றிடமிருந்து சுமார் ரூ.1.5 லட்சம் கடன் பெற்று, செகண்ட் ஹேண்ட்டில் கூட்ஸ் கேரியர் வாகனம் ஒன்றை வாங்கி அதன் பின்பக்கம் கூடாரம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி சில மாற்றங்களை செய்தார்.

Also Read : கடலில் மிதந்து வந்த பாட்டிலில் கடிதம் - என்ன எழுதியிருந்தது தெரியுமா ?

வாகனத்தில் ‘Sanchari Hebbuli Hair Dresser’ என்றார் பெயர் பலகையை தொங்க விட்டார். அவ்வளவு தான் நடமாடும் மொபைல் சலூனிற்கு சொந்தகாரார் ஆகிவிட்டார் ஷிவப்பா. சிக்கமகளூர் முழுவதும் தனது வாகனத்தை எடுத்து கொண்டு சுற்றியதன் மூலம் ஷிவப்பா தனது தொலைபேசி எண்ணை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். சலூனில் வேலை பார்த்த போது மாதம் ரூ .10000 மட்டுமே சம்பாதித்த தான், தற்போது மொபைல் சலூன் மூலம் நாள்தோறும் குறைந்தது சுமார் 1500 முதல் 2000 ரூபாய் வரை சம்பாதிப்பதாக கூறி மகிழ்ந்தார் ஷிவப்பா. அண்டை கிராமங்களைச் சேர்ந்தவர்களும் சலூன் சேவைகளை அவரை கால் செய்து அழைக்கிறார்கள்.

Also Read: 'ஆண்களுக்கு மகள்கள் தான் தேவை' - டுவைன் ஜான்சன் சொல்லும் முக்கிய காரணம்!

குறைந்தது 5 முதல் 10 வாடிக்கையாளர்கள் இருந்தால் 10 கி.மீ சுற்றளவில் எந்த கிராமத்திற்கும் அவர் தனது மொபைல் சலூன் சேவைகளை வழங்குகிறார். இவரது மொபைல் சலூன் முயற்சி வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து பல முடிதிருத்துவோர் இவரது வாகனத்தை பார்வையிட்டு சென்றுள்ளனர். விரைவில் அவர்களும் ஷிவப்பாவை பின்பற்றி மொபைல் சலூன் துவக்கலாம். ஆனால் மேலும் சில மொபைல் சலூன்கள் வந்தாலும் கூட, நான் கவலைப்பட மாட்டேன். என் தொழிலுக்கு நான் தான் முதலாளி, எவ்வளவு சொந்தமாக சம்பாதித்தாலும் சரி அது எனக்கு போதும் என்று ஷிவப்பா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Karnataka

அடுத்த செய்தி