மகளின் திருமணத்துக்கு ரூ.500 கோடி செலவழித்த பாஜக அமைச்சர்..!

மணமகள் ரக்சிதாவுக்கான மேக்கப் பணிகளை மேற்கொள்ள, நடிகை தீபிகா படுகோனின் மேக்கப் மேன் வரவழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளின் திருமணத்துக்கு ரூ.500 கோடி செலவழித்த பாஜக அமைச்சர்..!
பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு மகள் திருமணம்
  • Share this:
கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு, தனது மகள் திருமண விழாவை 500 கோடி ரூபாய் செலவில் 9 நாட்களுக்கு மிக பிரமாண்டமாக நடத்தி வருகிறார்.

பெங்களூரு பேலஸ் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறும் திருமணத்துக்காக கடந்த 27-ஆம் தேதி முதல் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. செந்தூரம், குங்குமம், சந்தனம், அரிசி உள்ளிட்டவை அடங்கிய ஒரு லட்சம் திருமண அழைப்பிதழ்கள் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளன.

மணமகள் ரக்சிதாதிருமண விழாவிற்காக ஹம்பியில் உள்ள புகழ்பெற்ற விருபாக்ஷி கோவிலை மனதில் கொண்டு 4 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது.

மேலும் மணமகள் ரக்சிதாவுக்கான மேக்கப் பணிகளை மேற்கொள்ள, நடிகை தீபிகா படுகோனின் மேக்கப் மேன் அழைக்கப்பட்டுள்ளார். முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்தை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தவர்களே ஸ்ரீராமுலு மகள் திருமணத்திற்கும் அழைக்கப்பட்டுள்ளனர்.
 
First published: March 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading