விரைவில் ஆதாரங்களை வெளியிடுவேன்: பா.ஜ.க.வுக்கு எச்சரிக்கை விடுத்த கர்நாடக அமைச்சர்

இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி குமாரசாமியும், சித்தராமையாவும் பொறுமையாக உள்ளனர். நானாக இருந்தால் 24 மணிநேரத்தில் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிட்டு இருப்பேன்.

Web Desk | news18
Updated: January 14, 2019, 6:07 PM IST
விரைவில் ஆதாரங்களை வெளியிடுவேன்: பா.ஜ.க.வுக்கு எச்சரிக்கை விடுத்த கர்நாடக அமைச்சர்
கர்நாடக அமைச்சர் சிவகுமார்
Web Desk | news18
Updated: January 14, 2019, 6:07 PM IST
ஆளும் அரசுடன் அதிருப்தியில் உள்ள 3 எம்.எல்.ஏக்கள் தற்போது மும்பையில் உள்ளனர் என்று கர்நாடக மாநில அமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தனி ஒரு கட்சியாக அதிக தொகுதிகளை வென்ற பா.ஜ.க, ஆட்சியமைப்பதற்காக எம்.எல்.ஏக்களுடன் குதிரை பேரத்தில் ஈடுபட்டுவருவதாக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தொடர்ச்சியாக குற்றம்சாட்டிவருகின்றனர்.

கடந்த சில தினங்களாக, கர்நாடக மாநில அமைச்சர் சிவகுமார் பா.ஜ.க.வுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பா.ஜ.கவினர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். பா.ஜ.கவுக்கு தனிப் பெரும்பான்மை இல்லை. அதனால்தான், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி, அதிகாரத்துக்காக, பா.ஜ.க செய்யும் தந்திரங்கள் பற்றி எனக்குத் தெரியும்.

எத்தனை எம்.எல்.ஏ.க்களுடன் அவர்கள் பேரம் பேசி உள்ளனர். எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த விதமான பதவிகள், பணம் தருவதாக கூறியுள்ளனர் என்ற தகவல்கள் உள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பேரம் பேசியது உள்ளிட்ட எல்லா ஆதாரங்களையும் காங்கிரஸ் தலைவர்களிடம் எம்.எல்.ஏ.க்களே கொடுத்துள்ளனர்.

எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவது பற்றி முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையாவுக்கு நன்கு தெரியும். அதனை அவர்கள் அலட்சியமாக விட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி குமாரசாமியும், சித்தராமையாவும் பொறுமையாக உள்ளனர். நானாக இருந்தால் 24 மணிநேரத்தில் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிட்டு இருப்பேன்.

கூடிய விரைவில் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுவோம்’ என்று தெரிவித்தார். காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிட்டால், அது பா.ஜ.கவுக்கு பாதகமாக அமையும். ஏற்கெனவே, பா.ஜ.கவின் முக்கிய மாநிலங்களில் பா.ஜ.க வலுவிழந்துள்ளநிலையில், கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறவேண்டிய நிலையில் உள்ளது. எனவே, விரைவில் ஆளும் அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் பா.ஜ.க. தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று தெரிகிறது.

விரைவில், கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்று சில செய்திகள் பரவுகின்றன.

Also see:

First published: January 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...