பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கர்நாடக ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, அமைச்சர் மீது லஞ்சப் புகார் அளித்த பொதுப் பணித்esa துறை ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அது குறித்து அவரது சகோதரர் பிரஷாந்த் பட்டீல் அளித்த புகாரின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடுப்பியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த பிரஷாந்த் பட்டீல், தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து, அவர் தனது தற்கொலைக்கு மந்திரி ஈஸ்வரப்பாதான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து, சந்தோஷ் பட்டீல் அளித்திருந்த லஞ்சப் புகாரின் அடிப்படையில்,அவரது தற்கொலை வழக்கில், அமைச்சர் ஈஸ்வரப்பாவின் அமைச்சக ஊழியர்கள் ரமேஷ், பசவராஜ் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏஆர் ரகுமான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக உருவாக்கிய மாணவன்
பொதுப் பணித் துறை ஒப்பந்தம் ஒன்றை சந்தோஷ் பட்டீல் மேற்கொண்டிருந்த நிலையில், அதற்கு உரிய தொகையை அமைச்சகம் விடுவிக்காமல் இருந்தது. தொகையை விடுவிக்கக் கோரி சந்தோஷ் பல முறை வலியுறுத்தியும், தொகையை வெளியிட வேண்டும் என்றால் 40 சதவீதம் லஞ்சம் தர வேண்டும் என்று அமைச்சக ஊழியர்கள் பசவராஜ், ரமேஷ் ஆகியோர் கேட்டுள்ளனர்.
இது குறித்து வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்த சந்தோஷ் பட்டீல், கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்க பதிவு செய்துள்ளனர். மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் முதல் பெயராக ஈஸ்வரப்பா பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஈஸ்வரப்பா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தான் பதவி விலகப் போவதில்லை என்று ஈஸ்வரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.