Amazon: கர்நாடக அரசின் சின்னம், கொடி கலரில் பிகினி உடை: கூகுளைத் தொடர்ந்து கர்நாடகாவை அவமதித்த அமேசான்!

அமேசான்

அமேசான் நிறுவனம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தி கன்னட ரக்‌ஷன வேதிகே உட்பட பல்வேறு கன்னட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

  • Share this:
கூகுள் தளத்தில் ‘இந்தியாவிலேயே மோசமான மொழி எது’ என்று ஆங்கிலத்தில் தேடினால் கன்னட மொழியை காட்டியது. இது கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதற்காக கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியது. இந்த சர்ச்சை முடிந்த சில தினங்களிலேயே தற்போது அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது அமேசான் நிறுவனம்.

கர்நாடக மாநில கொடியின் மஞ்சள் & சிவப்பு வண்ணத்தில், கர்நாடக மாநில அரசின் சின்னம் பொறித்த பிகினி உடை அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தான் கர்நாடக அரசை வம்புக்கு இழுத்திருக்கிறது அமேசான் நிறுவனம்.

கர்நாடக கொடி கலரில் பிகினி உடை


ஏற்கனவே கூகுள் நிறுவனம் ஏற்படுத்திய அவமதிப்பின் வடு மறைவதற்குள் தற்போது மேலும் ஒரு பன்னாட்டு நிறுவனம் கர்நாடக மாநில அரசின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்டிருப்பது கன்னட மக்களுக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து கர்நாடக வனம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பவல்லி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கூகுள் நிறுவனத்தால் கன்னட மக்களான நாம் சமீபத்தில் அவமதிக்கப்பட்டோம். அந்த வடு மறைவதற்கு முன்பே கன்னட கொடியின் வண்ணங்கள் மற்றும் அரசின் சின்னம் பொறிக்கப்பட்ட பெண்களின் ஆடைகளை அமேசான் பயன்படுத்தியிருப்பதை பார்க்கிறோம்.

 



கன்னடத்தை மீண்டும் மீண்டும் அவமதிப்பதை பன்னாட்டு நிறுவனங்கள் நிறுத்த வேண்டும். இது கன்னட மக்களின் கவுரவம் தொடர்பான விஷயம், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். அமேசான் நிறுவனம் உடனடியாக கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கை அமேசான் மீது எடுக்கப்படும்” இவ்வாறு அமைச்சர் அரவிந்த் லிம்பவல்லி தெரிவித்துள்ளார்.

Also Read:   அந்த 302 அதிர்ஷ்டசாலிகளுள் நானும் ஒருவன் என்பது மிகவும் ஸ்பெஷல் - மனம் திறந்த தினேஷ் கார்த்திக்!

இந்த விவகாரத்தில் அமேசான் நிறுவனம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தி கன்னட ரக்‌ஷன வேதிகே உட்பட பல்வேறு கன்னட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

Also Read:   மலையாளம் பேசும் செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை - டெல்லி அரசு மருத்துவமனை எச்சரிக்கை!

இதனிடையே அமேசானின் கனடா தளத்தில், கன்னட கொடி, சின்னம் பொறித்த பிகினி ஆடையை CafePress எனப்படும் நிறுவனம் விற்பனைக்கு பட்டியலிட்டிருப்பதாகவும், இது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேஷ் ஜெயின் என்பவரின் நிறுவனம் எனவும் கூறப்படுகிறது.
Published by:Arun
First published: