ஹோம் /நியூஸ் /இந்தியா /

Video | தேர்தல் பிரசாரத்தில் ‘நாகினி டான்ஸ்’ ஆடிய கர்நாடக அமைச்சர் ‘நாகராஜ்’!

Video | தேர்தல் பிரசாரத்தில் ‘நாகினி டான்ஸ்’ ஆடிய கர்நாடக அமைச்சர் ‘நாகராஜ்’!

அமைச்சர் நாகராஜ்

அமைச்சர் நாகராஜ்

தேர்தல் பிரசாரங்களில் அரசியல்வாதிகள் செய்யும் காமெடிகளுக்கும் பஞ்சமில்லை.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கர்நாடக வீட்டுவசதித்துறை அமைச்சர் நாகராஜ், உற்சாக மிகுதியில் நாகினி டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

  மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்க இருக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பிரசாரங்களில் அரசியல்வாதிகள் செய்யும் காமெடிகளுக்கும் பஞ்சமில்லை.

  கர்நாடகாவின் சிக்கபலபுரா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்பமொயிலி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தொகுதியில் மாநில வீட்டுவசதித்துறை அமைச்சர் நாகராஜ் பிரசாரம் செய்து வருகிறார்.

  ஹொஸ்கோடே என்ற இடத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பிரசாரம் செய்த நாகராஜ் உற்சாக மிகுதியால் நாகினி டான்ஸ் ஆடத்தொடங்கினார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Sankar
  First published:

  Tags: Elections 2019, Karnataka Lok Sabha Elections 2019, Lok Sabha Election 2019