Home /News /national /

அரசு விழாவில் முதல்வர் முன்னிலையில் மோதலில் ஈடுபட்ட அமைச்சர்கள்... பரபரப்பு சம்பவம்

அரசு விழாவில் முதல்வர் முன்னிலையில் மோதலில் ஈடுபட்ட அமைச்சர்கள்... பரபரப்பு சம்பவம்

அரசு விழாவில் முதல்வர் முன்னிலையில் மோதலில் ஈடுபட்ட அமைச்சர்கள்

அரசு விழாவில் முதல்வர் முன்னிலையில் மோதலில் ஈடுபட்ட அமைச்சர்கள்

கர்நாடகாவில் அரசு விழா மேடையில் முதலமைச்சர் முன்னிலையிலேயே, அமைச்சர் மற்றும் காங்கிரஸ் எம்.பி, மோதிக்கொண்ட சம்பவம் அரங்கேறியது.

    கர்நாடகாவில் அரசு விழா மேடையில் முதலமைச்சர் முன்னிலையிலேயே, அமைச்சர் மற்றும் காங்கிரஸ் எம்.பி, மோதிக்கொண்ட சம்பவம் அரங்கேறியது.

    கார்நாடகா மாநிலம் ராமநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த அமைச்சர் அஸ்வத் நாராயணன் பேசத் தொடங்கியதும், மேடை முன்பு அமர்ந்திருந்த சிலர் காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். இதனால், ஆத்திரமடைந்த அவர் சிவக்குமார், எந்த ஒரு வளர்ச்சிப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை என பேசினர்.

    இதைகேட்ட விழாவில் பங்கேற்று இருந்த சிவக்குமாரின் தம்பியும் எம்.பியுமான டி.கே.சுரேஷ், அப்படி என்ன திட்டங்களை நீங்கள் செயல்படுத்தி விட்டீர்கள் என கேட்டவாறு, அஸ்வத் நாராயணனை அடிக்க பாய்ந்தார்.போலீசார் சுரேஷை தடுத்து நிறுத்த, அஸ்வத் நாராயணன் தொடர்ந்து பேச முயன்றபோது, அவரது மைக்கை காங்கிரஸ் மேல்சபை உறுப்பினரான ரவி பிடுங்கி எறிந்தார்.



    அரசு விழாவில் அதுவும் முதல்வர் முன்னிலையில் அமைச்சர் மற்றும் எம்.பி இருவரும் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Karnataka

    அடுத்த செய்தி