கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள மஹாராஜா பூங்காவில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்பு பகுதியில் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியதாவது, கொடூரமாக தாக்கப்பட்ட அந்த நபர் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த மேகராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஹாசன் நகரில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், மேகராஜ் பூங்காவில் இருந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளது. தொடர்ந்து, மேகராஜை போலீஸாரிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக, அந்த கும்பல் அவரைத் கடுமையாக தாக்கி, நிர்வாணப்படுத்தி, பரபரப்பான போக்குவரத்துச் சந்திப்பில் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் நிலைமையை ஆய்வு செய்தனர். பின்னர் உடனடியாக மேகராஜ் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட, ஹாசன் நகர போலீஸார், மேகராஜை தாக்கி, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச்சென்ற, அடையாளம் தெரியாத நான்கு பேர் மீது, வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறும்போது, குற்றம் சாட்டப்பட்டவர் மீது, பாதிக்கப்பட்ட பெண் எந்த புகாரும் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாலியல் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை இன்றி ரேஷன் பொருள் வழுங்குக - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
இதனால், கொடூரமாக தாக்கப்பட்டு, பொது இடத்தில் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதாக மேகராஜ் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், ஐபிசி பிரிவுகள் 341 , 323, 504, மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் நான்கு நபர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.
Also read: பெண்ணிடம் கணவரின் வீட்டார் எந்த பொருளை கேட்டாலும் அது வரதட்சணையே.. உச்சநீதிமன்றம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karnataka