கோவாவிற்கு ரஷ்யாவைச் சேர்ந்த பெண்ணும் அவரது 12 வயது மகளும் சுற்றுலா வந்துள்ளனர். அந்த 12 வயது சிறுமியை அங்குள்ள விடுதியில் பணிபுரியும் நபர் பாலியல் வன்புணர்வு செய்ததாக அவரது தாய் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை தெரிவித்த தகவலில், வடக்கு கோவாவில் உள்ள அரம்போல் பகுதியில் உள்ள விடுதியில் இவர்கள் தங்கியுள்ளனர். இங்கு கர்நாடகாவைச் சேர்ந்த ரவி லமானி என்ற 23 வயது நபர் பணிபுரிந்துள்ளார்.
இந்த நபர் அங்கு தங்கியிருந்த 12 வயது சிறுமியை ரவி நீச்சல் குளம், ஹோட்டல் ரூம் அருகே வைத்தும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக புகார் தரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கோவா காவல்துறையினர் சம்பவந்தபட்ட நபரை காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர். அந்நபர் கோவாவில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.
இதையும் படிங்க:
கேரளாவில் வேகமெடுக்கும் தக்காளி காய்ச்சல் பரவல்.. 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு... அறிகுறிகள் என்னென்ன?
இந்நிலையில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் கர்நாடகா மாநிலம் கடக் பகுதியில் உள்ள அவரது சொந்து ஊரில் வைத்து கைது செய்துள்ளனர். அந்நபர் மீது இபிகோ 376, போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.