கர்நாடகாவில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜகவை பின்னுக்குத் தள்ளி அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று திரும்பிப் பார்க்க செய்திருக்கிறது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் நாடு முழுவதும் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தொடர் சரிவை சந்தித்து வருகிறது. 2018ல் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட 104 தொகுதிகளில் வென்று பிரதான கட்சியாக பாஜக வந்தது. இருப்பினும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தின. இருப்பினும் 2019 ஜூலை மாதவாக்கில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் அக்கூட்டணி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது.
இந்நிலையில், சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜகவை பின்னுக்குத் தள்ளியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
Also read: இந்தியாவில் முதல் ஓமைக்ரான் மரணம்
மாநிலத்தில் 20 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 1184 இடங்களுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. இதன் முடிவுகள் தற்போது முழுமையாக வெளிவந்துள்ளன.
மொத்தம் உள்ள 1184 இடங்களில் எதிர்கட்சியான காங்கிரஸ் 498 இடங்களிலும், ஆளும் பாஜக 437 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆளும் பாஜகவைவிட கூடுதலான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் 45 இடங்களிலும், சுயேட்சைகள், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் போன்ற இதர கட்சிகள் 204 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
Also read: உலகிலேயே முதல் முறையாக கைகளால் இல்லாமல் மூளையின் சிக்னலால் ட்வீட் செய்த மனிதர்!
2023ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜகவுக்கு ஏற்பட்ட இந்த சறுக்கல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 20 உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றிருக்கிறது. 15 அமைப்புகளில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது.
Also read: லாக்டவுன் விதிமீறியவர்களை துப்பாக்கி முனையில் ஊர்வலம் அழைத்துச்சென்று அவமதித்த சீன போலீசார்
தேர்தலில் காங்கிரஸில் செயல்பாடு குறித்து பேசிய மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், கர்நாடகாவில் காங்கிரஸ் அலை வீசிவருகிறது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக கூறினார்.
முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்தத் தொகுதியில் உள்ள பங்காபூரில் பாஜக தோல்வியடைந்துள்ளது. இது குறித்து முதல்வர் கூறுகையில், அங்கு எப்போதுமே நாங்கள் வெற்றி பெற்றது கிடையாது. அங்கு குறிப்பிட்ட சிறுபான்மையினர் அதிகம் வசிக்கிறார்கள் கடந்த தேர்தலை விட இப்போது சிறப்பாகவே வென்றுள்ளோம். இருப்பினும் இந்த முறை கூடுதலாக வெற்றி பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.