Home /News /national /

கர்நாடகாவில் காங்கிரசைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா!

கர்நாடகாவில் காங்கிரசைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா!

சித்தராமையா

சித்தராமையா

ஆட்சியைக் காப்பாற்ற குமாரசாமியும் ராஜினாமா செய்யலாம் என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

  • News18
  • Last Updated :
கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்து அவர்களுக்கு பதவியை விட்டுக்கொடுப்பதற்காக கர்நாடகாவில் காங்கிரசைச் சேர்ந்த 21 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் நேற்று முன் தினம் திடீரென ராஜினாமா செய்தனர். இதனால் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்த குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலை உருவாகியுள்ளது.

ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இறங்கியுள்ள இரு கட்சிகளும், மும்பையில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் ராஜினாமா முடிவைத் திரும்பப் பெறும்படி சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. அரசியல் சாசனப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார்.

kumarasamy | குமாரசாமி கர்நாடக முதல்வர் குமாரசாமி

இந்த நிலையில், அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் குமாரசாமி அவசரமாக நேற்று மாலை பெங்களுரு திரும்பினார். அங்குள்ள தாஜ் வெஸ்ட் என்ட் ஹோட்டலில் அவர் கூட்டணிக் கட்சியினருடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

இதில், அமைச்சர் எச்.டி தேவகவுடா, துணை முதலமைச்சர் பரமேஸ்வரா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். முன்னதாக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி மூத்த தலைவர் சிவராம் கவுடா, ராஜினாமா கடிதம் அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தங்கள் பக்கம் வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.



100 சதவீதம் அவர்கள் (ராஜினாமா கடிதம் அளித்த உறுப்பினர்கள்) திரும்பி வருவார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட பிரச்னை உள்ளது. தங்களது பிரச்னைகளை கட்சியின் மூத்த தலைவர்களிடம் பகிர்ந்துள்ளனர். இதனால், இந்த விவகாரம் தீர்த்து வைக்கப்படும். அமைச்சரவை மாற்றியமைப்பது குறித்து ஓரிரு நாளில் இரு கட்சி தலைவர்களும் ஆலோசித்து முடிவெடுப்பர்கள்.

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள சித்தராமையாவை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்றால் அதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டோம் என்று அமைச்சரும், மதசார்பற்ற ஜனதாதள நிர்வாகியுமான எச்.டி தேவ கவுடா தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் குமாரசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இதற்கிடையே, ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ. சோமசேகர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியுடன் சித்தராமையா

10 சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கு உள்ளோம். 13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளோம். இதனை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். நாங்கள் 13 பேரும் ஒற்றுமையாக உள்ளோம். பெங்களுரு திரும்பிச் செல்லவோ, ராஜினாமா முடிவை திரும்பப் பெறும் கேள்விக்கே இடமில்லை.

இதற்கிடையே, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள சொகுசு விடுதி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இந்த குழப்பமான சூழலில் சுயேட்சை எம்.எல்.ஏ.வும் மாநில அமைச்சருமான நாகேஷ், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், குமாரசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்துள்ளார்.

பாஜக ஆட்சி அமைந்தால் ஆதரவு அளிப்பேன் என்று கூறிய நாகேஷ் மேலும், பலர் ராஜினாமா செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தக்கவைத்து அவர்களுக்கு அமைச்சர் பதவியை அளிக்கும் வகையில், காங்கிரசைச் சேர்ந்த 21 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார்.

ஆட்சியைக் காப்பாற்ற குமாரசாமியும் ராஜினாமா செய்யலாம் என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, மக்களவையில் கர்நாடக அரசியல் சூழல் தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், “பாஜக நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், ஒரு போதும் குதிரை பேரத்தில் ஈடுபடாது” என்றும் கூறினார்.

First published:

Tags: HD Kumaraswamy, Karnataka, Siddaramaiah

அடுத்த செய்தி