கர்நாடகாவில் 3-வது நாளில் புதிய உச்சம் தொட்ட மது விற்பனை - எத்தனை கோடி தெரியுமா?

வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கர்நாடகாவில் 3-வது நாளில் புதிய உச்சம் தொட்ட மது விற்பனை - எத்தனை கோடி தெரியுமா?
கோப்புப் படம்
  • Share this:
கர்நாடக மாநிலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட மூன்றாவது நாளில் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பின்னர் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் 17 -ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை தொடர்கிறது.

இதனிடையே சில நிபந்தனைகளுடன் மதுபானக் கடைகளை திறைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில் கடந்த மார்ச் 23-ம் தேதி கர்நாடகாவில் மூடப்பட்ட மதுக்கடைகள் நேற்று முன் தினம் திறக்கப்பட்டன.


திறக்கப்பட்ட முதல் நாள் அன்றே மது பிரியர்கள் போட்டி போட்டிக் கொண்டு பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே கர்நாடக எல்லையோரம் இருக்கும் தமிழக குடிமகன்களும் போலீஸ் கண்ணிலும் மண்ணைத் தூவி கர்நாடகாவுக்குச் சென்று மது வாங்கி வந்தனர்.

முதல் நாளில் 45 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. நேற்று செவ்வாய் அன்ன்று விற்பனை பலமடங்கு அதிகரித்து 197 கோடி ரூபாய்க்கு மது விற்பனையான நிலையில், மூன்றாவது நாளான இன்று 231.6 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.  வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
First published: May 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading