தமிழகம் பற்ற வைத்த நெருப்பு... கர்நாடகாவில் இன்று ட்ரெண்ட் ஆன #KarnatakaJobsForKannadigas

தமிழகத்தில் நேற்று எழுந்த குரல், கர்நாடகாவிலும் இன்று அதே உச்சத்தில் எழுந்துள்ளது.

தமிழகம் பற்ற வைத்த நெருப்பு... கர்நாடகாவில் இன்று ட்ரெண்ட் ஆன #KarnatakaJobsForKannadigas
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: May 4, 2019, 9:49 PM IST
  • Share this:
தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை என்று நேற்று இங்கு குரல் எழுந்த நிலையில், இன்று கர்நாடகாவிலும் அதே போன்ற குரல் ஒலித்துள்ளது.

தமிழ்நாட்டில் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுக்குச் சொந்தமான 18 பொதுத்துறை நிறுவனங்களில் 90 முதல் 100 சதவீதம் வரை அயல் மாநிலத்தவருக்கு பணி வழங்கப்பட்டு தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வருவதாக சில ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதற்கு உதாரணமாக தமிழே தெரியாத வட மாநில இளைஞர்கள், தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறி அஞ்சல் துறையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். மேலும், ரயில்வே துறையில் தொழில்பழகுனர் பணிக்கு 90 சதவிகிதம் வட மாநில இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


இதையும் பாருங்க... #தமிழகவேலைதமிழருக்கே போராட்டம்

இதனால், தமிழகத்தில் இருந்து அரசு வேலைக்கு தயாராகிவரும் இளைஞர்கள் கொந்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தி தமிழ்தேசிய பேரியக்கம் சார்பில் பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 400-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

ட்விட்டரில் டிரெண்டிங் ஆன ஹேஷ்டேக்குகள்
மேலும், #தமிழகவேலைதமிழருக்கே மற்றும் #TamilnaduJobsForTamils ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. பலரும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து வந்தனர்.

இதையும் படிங்க... வேலை மட்டுமா பறிபோகிறது…? தவிக்கும் தமிழக இளைஞர்கள்

தமிழகத்தில் நேற்று எழுந்த குரல், கர்நாடகாவிலும் இன்று அதே உச்சத்தில் எழுந்துள்ளது. #KarnatakaJobsForKannadigas என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.கர்நாடகாவில் உள்ள மத்திய அரசுப்பணிகளில் கன்னட மக்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.அம்மாநில முதல்வர் குமாரசாமியும் இதனை வலியுறுத்தி ட்வீட் செய்துள்ளார்.

Also See...

First published: May 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading