• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஐபிஎஸ் பதவியில் இருந்து விலகிய கர்நாடக ’சிங்கம்’...! தமிழக அரசியலில் நுழைய முடிவு?

ஐபிஎஸ் பதவியில் இருந்து விலகிய கர்நாடக ’சிங்கம்’...! தமிழக அரசியலில் நுழைய முடிவு?

அண்ணாமலை ஐபிஎஸ்

அண்ணாமலை ஐபிஎஸ்

பணியின்போது மிகவும் கண்டிப்பாக இருப்பார் என்பதால் காவல்துறையில் இவருக்கு அண்ணாமலைக்கு ’சிங்கம்’ என்ற செல்ல பெயரும் உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அரசியலில் ஈடுபடுவதற்காக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூரை சேர்ந்த அண்ணாமலை 2011-ம் ஆண்டு கர்நாடக மாநில ஐபிஎஸ் அதிகாரி பிரிவில் இணைந்து பணியாற்றி வந்தார்.

பணியின்போது மிகவும் கண்டிப்பாக இருப்பார் என்பதால் காவல்துறையில் இவருக்கு அண்ணாமலைக்கு ’சிங்கம்’ என்ற செல்ல பெயரும் உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு பதவிகளில் வகித்து வந்த இவர், நேற்று தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். அரசியல் ஈடுபாடு கொண்டுள்ள இவர், தமிழகத்தில் அரசியல் கட்சி ஒன்றில் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேசமயம், காவல்துறையில் பணியாற்றியதால் முக்கிய நபர்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்க முடியாத சூழல் இருந்ததாகவும், இனி தனது மகனுக்கு நல்ல தந்தையாக இருக்க விரும்புவதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

மேலும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும், அண்ணாமலை அரசியலில் ஈடுபடுவதற்காகவே ஐபிஎஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்தாரா என்ற சந்தேகமும் உள்ளது சிலருக்கு.  அவர் ஒரு  தேசிய கட்சியில் இணையப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Watch: ராகுல் காந்திக்காக நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற தொண்டர்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Anand Kumar
First published: