• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • IFS அதிகாரியான கணவர் மீது ஐபிஎஸ் அதிகாரியான மனைவி வரதட்சணை புகார்; உடல் ரீதியான துன்புறுத்தலை அனுபவித்ததாகவும் குற்றச்சாட்டு!

IFS அதிகாரியான கணவர் மீது ஐபிஎஸ் அதிகாரியான மனைவி வரதட்சணை புகார்; உடல் ரீதியான துன்புறுத்தலை அனுபவித்ததாகவும் குற்றச்சாட்டு!


IFS அதிகாரி மீது வரதட்சணை புகார்

IFS அதிகாரி மீது வரதட்சணை புகார்

எனது கணவரின் அளவுக்கதிகமான குடிப்பழக்கம் மற்றும் புகைப் பழக்கம் காரணமாகவும் எங்கள் குடும்பத்தில் பிரச்னைகள் எழுகிறது.

  • Share this:
கர்நாடகாவைச் சேர்ந்த 34 வயது பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வரும் தனது கணவர் மீது வரதட்சணை, துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார்.

KSRP ஆராய்ச்சி மையத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார் வர்த்திகா கட்டியார். இவர் வெளியுறவு அமைச்சகத்தில் துணை செயலாளர் ஆக பணியாற்றி வரும் தனது கணவர் நிதிஷ் சுபாஷ் யோலா மற்றும் அவரின் குடும்பத்தினரால் பல ஆண்டுகாலம் பொருளாதார, உடல் மற்றும் மன ரீதியில் துன்புறுத்தல் அனுபவித்து வந்ததாக பெங்களூருவில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வர்த்திகாவின் புகாரின் பேரில் அவருடைய கணவர் யோலா மீது வரதட்சணை, மோசடி, துன்புறுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வர்த்திகா அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளவை:

நவம்பர் 7, 2011ல் எங்களின் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்றதில் இருந்தே உடல் - மன ரீதியாகவும், பொருளாதார ரீதியிலும் துன்புறுத்தலை சந்தித்து வருகிறேன்.

மகாராஷ்டிராவின் புவசலில் நடைபெற்ற திருமணத்திற்கான முழு செலவையும் எனது பெற்றோர் தான் செய்தனர். இருப்பினும் திருமணமான 3 மாதங்களுக்குள் 3 லட்ச ரூபாய் பணமும், தங்க நகைகளும் தர வேண்டும், இல்லையென்றால் திருமணத்தை முறித்துக்கொள்வதாக கணவரும், அவரின் குடும்பத்தினரும் என்னை மிரட்டினர்.

பின்னர் இதையே கூறி அடிக்கடி என்னை மிரட்டி எனது பெற்றோர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டனர்.

ஒரு சமயம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள எனது பாட்டியிடம் சென்று திருமண பந்தத்தை முறித்துவிடுவதாக மிரட்டி 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றார் எனது கணவர். இதையறிந்த நான், அந்தப் பணத்தை நானே திருப்பியளிப்பதாகவும், வாங்கிய பணத்தை பாட்டியிடமே திருப்பிக்கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டேன். ஆனால் அதையும் அவர் கொடுக்கவில்லை.

2016ல் இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு சுற்றுலா சென்ற போது எனது கையை முறித்து மார்பிள் கல்லால் எனது கணவர் என்னை தாக்கினார். 2018ல் மீண்டும் ஒரு முறை கொழும்பு சென்ற போதும் அங்கு என்னை துன்புறுத்தினார்.

எனது கணவரின் அளவுக்கதிகமான குடிப்பழக்கம் மற்றும் புகைப் பழக்கம் காரணமாகவும் எங்கள் குடும்பத்தில் பிரச்னைகள் எழுகிறது.
எனது பிரசவத்தின் போதும் சரி இந்த துன்புறுத்தலை அனுபவித்தேன். பல ஆண்டுகளாக கணவரும், அவரின் குடும்பத்தினராலும் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: