Home /News /national /

ஹிஜாப் விவகாரம்: காவி துண்டுக்கு எதிராக நீலத் துண்டு அணிந்து மாணவர்கள் ஆதரவு

ஹிஜாப் விவகாரம்: காவி துண்டுக்கு எதிராக நீலத் துண்டு அணிந்து மாணவர்கள் ஆதரவு

பர்தா விவகாரம்

பர்தா விவகாரம்

கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பர்தா விவகாரம் (Karnataka Hijab Row) தொடர்பாக நாளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது. இதனிடையே இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக தலீத் மாணவர்கள் நீலத்துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வந்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கர்நாடகாவில் கல்வி நிலையங்களுக்கு இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் காவித் துண்டு அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரத் தொடங்கினர். இந்நிலையில், இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக பட்டியலின மாணவர்கள் நீலத் துண்டு அணிந்து வரத் தொடங்கியுள்ளனர்.

    கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள குண்டாபூர் நகரில் செயல்படும் அரசு பள்ளி ஒன்று மாணவிகள் பர்தா அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது. எனினும், மாணவிகள் பர்தா அணிந்தே பள்ளிக்கு வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் பள்ளி வளாகத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

    இதனிடையே, இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்துவருவதற்கு போட்டியாக து இந்து மாணவ, மாணவிகளில் ஒருசிலர் காவித் துண்டு அணிந்து கல்லூரிகளுக்கு வரத் தொடங்கினர். மாணவர்களின் இந்த உடை போராட்டம் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று குண்டாபூர் நகரில் உள்ள அரசு பள்ளிக்கு பர்தா அணிந்து வந்த மாணவிகள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    எனினும் தனி வகுப்புறையில் அமரவைக்கப்பட்ட அவர்களுக்கு வகுப்புகள் நடைபெறவில்லை.  இதேபோல், ஒரு சில கல்லூரிகளுக்கு காவித்துண்டு அணிந்து மாணவர்கள் வந்தனர்.  இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்துவந்தால் நாங்களும் காவித்துண்டு அணிந்துவருவோம் என அவர்கள் கூறி வருகின்றனர்.

    இதையும் படிங்க: நாட்டிலேயே முதல் முறையாக அசாமில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் முழுமையாக நீக்கம்... மாநில அரசு அறிவிப்பு


    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பர்தா விவகாரம் (Karnataka Hijab Row) தொடர்பாக நாளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில், இன்று இரண்டு கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக பட்டியலின மாணவர்கள் நீலத் துண்டு அணிந்து கல்லூரிகளுக்கு வந்தனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Girl students, Karnataka, School student

    அடுத்த செய்தி