Home /News /national /

நாம் யாரும் துருக்கியில் வசிக்கவில்லை - ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பு வாதம்

நாம் யாரும் துருக்கியில் வசிக்கவில்லை - ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பு வாதம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Hijab Case: கல்லூரி மேம்பாட்டுக்குழு கல்வி சட்டத்தின் கீழ் இல்லாத அமைப்பு , சீருடை குறித்து முடிவெடுக்க அக்குழுவுக்கு அதிகாரம் இல்லை - இஸ்லாமிய மாணவிகள் தரப்பு வாதம்

    கர்நாடகாவில் நடைபெறும் ஹிஜாப் வழக்கில் சீருடை குறித்து முடிவெடுக்க கல்லூரி வளர்ச்சிக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என, இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடகாவில் 9 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஜூனியர் கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு எதிராக மாணவிகள் தொடர்ந்த வழக்கு, அந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு மூன்றாவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    Also Read:  உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் - இந்திய தூதரகம் வலியுறுத்தல்

    அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவ்தத் காமத், நாம் துருக்கியில் வசிக்கவில்லை என்றும், நமது அரசியல் சாசனம் பல்வேறு நம்பிக்கைகளை அங்கீகரிக்கிறது எனவும் கூறினார். நாம் அனைத்து மதங்களையும் அங்கீகரிக்கிறோம் எனவும் வாதாடினார். கல்லூரி மேம்பாட்டுக்குழு கல்வி சட்டத்தின் கீழ் இல்லாத அமைப்பு எனவும், சீருடை குறித்து முடிவெடுக்க அக்குழுவுக்கு அதிகாரம் இல்லை எனவும் வாதாடப்பட்டது.  வாதங்களை கேட்ட நீதிபதிகள் அடுத்தகட்ட விசாரணையை புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Karnataka

    அடுத்த செய்தி