• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நிர்வாண பூஜை செய்தால் புதையல் வரும்.. போலிச்சாமியாரின்  மாயவித்தைகள் - கர்நாடகாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

நிர்வாண பூஜை செய்தால் புதையல் வரும்.. போலிச்சாமியாரின்  மாயவித்தைகள் - கர்நாடகாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

புதையலுக்காக நிர்வாண பூஜை செய்து பின்னர் சிறுமியை நரபலி கொடுக்கும் நோக்கில் அழைத்து வந்ததாக உள்ளூர் வாசிகள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

  • Share this:
    போலிச்சாமியாரால் நிர்வாண பூஜை செய்ய அழைத்துச்செல்லப்பட்ட பெண், நான்கு வயது சிறுமியை போலீஸார் மீட்ட சம்பவம் கர்நாடகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வீட்டுல புதையல் இருக்கு.. நிர்வாண பூஜை செய்தால் மண்ணில் இருக்கும் புதையல் தானா வெளியில வரும். இல்லையென்றால் அந்த பொக்கிஷம் இந்த வீட்டுல கெட்ட விஷயங்கள் நடக்க வழி வகுக்கும்ன்னு.. விவசாயி வீட்டுக்கு வந்த போலிச்சாமியார் கூறியுள்ளார். புதையலுக்கு ஆசைப்பட்ட விவசாயி வேலைக்கார பெண்ணை சாமியார் நடத்தும் நிர்வாண பூஜையில் பங்கேற்க கட்டாயப்படுத்தியுள்ளார். போலிச் சாமியாரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கிராம வாசிகள் கொடுத்த புகாரின் பேரில் நிர்வாண பூஜைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பெண், நான்கு வயது சிறுமியை போலீஸார் மீட்ட சம்பவம் கர்நாடகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நடந்தது என்ன?

    கர்நாடக மாநிலம் பூனஹள்ளியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். விவசாயத் தொழில் செய்து வருகிறார்.  இவர் 2019-ம் ஆண்டு ஒரு திருமண நிகழ்விற்காக தமிழகம் வந்துள்ளார்.  அப்போது ஷாஹிகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு கர்நாடக சென்ற ஷாஹிகுமார் விவசாயி ஸ்ரீனிவாஸை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். ஸ்ரீனிவாஸ் குடியிருப்பது அவரது பரம்பரை வீடு எனக் கூறப்படுகிறது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

    Also Read:  வாட்ஸ் அப்பில் ஆபாச படம்.. பேக் ஐடியில் பெண்களுக்கு பாலியல் தொல்லை - நாகர்கோவில் இளைஞரின் லீலை அம்பலம்

    ஸ்ரீனிவாஸை தனியாக அழைந்த ஷாஹிகுமார். இந்த வீட்டுல புதையல் மறைந்து இருக்கு. அந்த பொக்கிஷத்தை வெளியில் எடுக்கவும். அதை அப்படியே விட்டுவிட்டீர்கள் என்றால் உங்கள் வீட்டில் விரும்பத்தகாத கெட்ட நிகழ்வுகள் நடக்கத்தொடங்கும் எனக் கூறியுள்ளார். இதற்கு பரிகாரம் இருக்கு. நான் உங்களுக்கு பரிகாரம் செய்துத்தருகிறேன் என நம்பிக்கை அளித்து முன்பணமாக ரூபாய் 20000 ரொக்கமாக பெற்றுச்சென்றுள்ளார்.

    கொரோனா ஊரடங்கு காரணமக ஷாஹிகுமாரால் கர்நாடகம் செல்ல முடியவில்லை. இந்நிலையில் பரிகார பூஜையை தள்ளிவைத்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீனிவாஸை அவரது வீட்டில் சென்று சந்தித்துள்ளார். பரிகாரம் செய்வதற்காக பணிகளை தொடங்கியுள்ளார். அப்போது வீட்டில் பூஜை செய்வதற்கான அறையை தேர்ந்தெடுத்துள்ளார். பூஜை செய்யும் போது ஒரு பெண் நிர்வாணமாக தன் முன் அமர்ந்தால் புதையல் வெளிபடும். அந்தப்பெண் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து ஸ்ரீனிவாஸ் ஒரு பெண்ணை ரூபாய் 5000 கொடுத்து கூலிக்கு அழைத்து வந்துள்ளார்.

    Also Read:  ஒன்றாக வந்த 4 காதலிகள்..ஷாக்கான காதல் ரோமியோ – விஷம் குடித்து தற்கொலை முயற்சி

    விவசாயி ஸ்ரீனிவாஸ் மற்றும் போலிச்சாமியார் ஷாஹிகுமார் நடவடிக்கையில் சந்தேகமடைந்த உள்ளூர்வாசிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போலீஸார் கூலிக்கு அழைத்து வந்த  பெண்ணையும் அவரது 4 வயது குழந்தையையும் மீட்டனர். போலிச்சாமியார் ஷாஹிகுமார் மற்றும் அவருடன் இருந்த 5 நபர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் போலிச்சாமியாரின் உதவியாளர் மோகன், கொத்தனார் வேலை செய்யும் லட்சுமி நரசப்பா, லோகேஷ்ம் நாகராஜ் மற்றும் பார்த்த சாரதி என்பது தெரியவந்தது.

    நிர்வாண பூஜைக்கு பின்னர் சிறுமியை நரபலி கொடுக்கும் நோக்கில் அழைத்து வந்ததாக உள்ளூர் வாசிகள் சந்தேகம் எழுப்புகின்றனர். நரபலி கொடுக்க சிறுமி அழைத்து வரப்படவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: