Home /News /national /

மனைவியுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு.. அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்த கொடுமை - ஐஐடி பட்டதாரி மீது மனைவி புகார்

மனைவியுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு.. அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்த கொடுமை - ஐஐடி பட்டதாரி மீது மனைவி புகார்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கணவர் வீட்டை விட்டு அந்த பெண் வெளியேறிய நிலையில், அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை பெண்ணின் தந்தைக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தனது கணவர் இயற்கைக்கு மாறாக உடலுறவு வைக்கக் கோரி துன்பப்படுத்தியதாக பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

    பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் அவரது கணவரும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வசித்து வருகின்றனர்.இருவரும் ஐஐடி பாம்பேவில் பட்டம் படித்து வந்துள்ளனர். படிக்கும் போது இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் 2015ஆம் ஆண்டு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அந்த பெண் சத்தீஸ்கரைச் சேர்ந்தவர். ஆண் பெங்களூரைச் சேர்ந்தவர்.

    திருமணத்திற்கு பின் இருவரும் பெங்களூருக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்நிலையில், திருமணத்திற்குப் பின் அந்த பெண்ணை தன்னுடன் இயற்கைக்கு மாறான விதத்தில் உடலுறவு கொள்ள வேண்டும் என கணவர் தொடர்ந்து கட்டாயப்படுத்தி அத்துமீறி உள்ளார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத மனைவி வீட்டை விட்டு வெளியேறி தந்தை வீட்டான சத்தீஸ்கர்க்கு சென்றுள்ளார்.

    சிறிது காலம் கழித்து அந்த பெண்ணை சமாதானப்படுத்த சத்தீஸ்கர் சென்ற கணவர், இனி இது போன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என உறுதி அளித்துள்ளார். அதை நம்பி அப்பெண் பெங்களூரு திரும்பிய நிலையில், அதே கொடுமையை மீண்டும் செய்துள்ளார். மீண்டும் கணவர் வீட்டை விட்டு அந்த பெண் வெளியேறிய நிலையில், அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை பெண்ணின் தந்தைக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்த அந்த பெண் சத்தீஸ்கர் காவல்துறையை அணுகி புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சத்தீஸ்கர் காவல்துறை அதை பெங்களூர் காவல்துறைக்கு இடம் மாற்றியது.

    இதையும் படிங்க: பார்ட்டி சென்று வீடு திரும்பிய பள்ளி மாணவி.. காரில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த மாணவர்கள்

    ஆனால், பெங்களூரு காவல்துறை தனது விசாரணையின் போது முக்கிய குற்றப்பிரிவை சேர்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதை அடுத்து பெங்களூரு உயர் நீதிமன்ற பெண் நாடினார். இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி நகபிரசன்னா தலைமையிலான அமர்வு, பெங்களூரு காவல்துறை நடவடிக்கையை சாடியுள்ளது. அத்துடன், வழக்கை முறையாக விசாரித்து இரண்டு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Bangalore, Crime News, Husband Wife, Karnataka

    அடுத்த செய்தி