‘மரம் வளர்ப்பது குற்றமில்லை’- ஈஷாவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

காவிரி கூக்குரல்

தற்போதைய சூழலில் மனித இனத்தையும் பூமியை காப்பாற்ற மரங்களை நடுதல் அவசியம் ஆகும். இதனை ஈஷா அறக்கட்டளை செய்து வருகிறது.இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

 • Share this:
  தரிசு நிலத்தில் மரம் வளர்ப்பது தவறு இல்லை எனக் கூறி ஈஷாவின் காவிரி கூக்குரல் மரம் வளர்ப்பு திட்டத்துக்கு எதிரான மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

  ஈஷா அறக்கட்டளை ‘காவிரி கூக்குரல்’ என்னும் திட்டத்தின் கீழ் காவிரி கரையை ஒட்டிய பகுதிகளில் மரம் வளர்க்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறப்படுகிறது. இந்நிலையில், காவிரி கூக்குரல் மரம் வளர்ப்பு திட்டத்திற்காக பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெற ஈசா அறக்கட்டளைக்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,” தரிசு நிலத்தில் மரம் வளர்ப்பது தவறு இல்லை. அரசு நிலத்தில்  ஈசா மரம் நடவில்லை. அரசு நிலத்தில் மரம் நடுவதற்கு தடை உள்ளது என்ற முடிவை நாம் எடுத்தோமானால்,  அது அழிவை உருவாக்கும். எவ்வித நோக்கமும் இன்றி அரசு நிலத்தில் மரங்களை என்.ஜி.ஓ.க்கள் நட்டு வருவது பாதிக்கப்படும்.

  தற்போதைய சூழலை கருத்தில் கொள்ளும்போது  காடு வளர்ப்பு என்பது மிகவும் அவசியமாகிவிட்டது. காவிரி கூக்குரல் போன்ற திட்டங்களுக்கு பாராட்டு அவசியம்” என்று நீதிமன்றம் தெரிவித்தது.  தற்போதைய சூழலில் மனித இனத்தையும் பூமியை காப்பாற்ற மரங்களை நடுதல் அவசியம் ஆகும். இதனை ஈசா அறக்கட்டளை செய்து வருகிறது.இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

  இதையும் படிங்க: புதிய பல்லி இனத்தை கண்டுபிடித்த கோவா பல்கலைக்கழக அறிவியலாளர்கள்!


  மேலும், அரசு நிலத்தில் தனியார் மரம் நடுவதற்கு தடை விதிக்கும் எந்த சட்டமும் தங்கள் பார்வைக்கு வரவில்லை என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.  கருநாடக அரசு தரப்பில், அரசு நிலத்தில் எவ்வித மரமும் நடப்படவில்லை என்று விளக்கமளிப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டிய  கேள்வி  எழவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: