• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • காதலி மிரட்டியதால் மணமகன் தப்பியோட்டம்.. விருந்தினராக வந்திருந்த உறவினரை மணந்த மணமகள்.. என்ன நடந்தது?

காதலி மிரட்டியதால் மணமகன் தப்பியோட்டம்.. விருந்தினராக வந்திருந்த உறவினரை மணந்த மணமகள்.. என்ன நடந்தது?

திருமணம்

திருமணம்

கர்நாடகாவில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகன் ஓடிப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இருப்பினும் திருமணம் நிற்கவில்லை. மணமகன் மணமேடையை விட்டு ஓடிய பிறகு தான் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.

  • Share this:
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்ற பழமொழியை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், எல்லா திருமணங்களும் அவ்வாறு இல்லை என்பதை குறிக்கும் வகையில் ஆங்காங்கே சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பொதுவாக மணமகளின் விருப்பத்திற்கு மாறாக நடக்கும் அநேக திருமணங்கள் மணமேடை வரை வந்து நின்றுபோயிருக்கின்றன. ஆனால் கர்நாடகாவில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகன் ஓடிப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இருப்பினும் திருமணம் நிற்கவில்லை. மணமகன் மணமேடையை விட்டு ஓடிய பிறகு தான் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.  திருமண விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களில் ஒருவருடன் மணமகள் திருமணம் செய்து கொண்டார். சற்று சினிமா பாணியை நியாபகப்படுத்தினாலும், இது உண்மையாக நடந்த ஒரு நிகழ்வு. இந்த சம்பவம் கர்நாடகாவின் சிக்கமகளூரு (Chikkamagaluru) மாவட்டம் தரிகேர் (Tarikere) தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்துள்ளது.

இது தொடர்பாக பெங்களூரு மிரர் பத்திரிகையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மணமகனின் பெயர் நவீன் மற்றும் மணமகளின் பெயர் சிந்து. இந்த நிலையில் திருமணத்திற்கு வந்திருப்பவர்கள் முன்னிலையில் விஷம் குடித்து திருமணத்தை நிறுத்துவேன் என தனது காதலி மிரட்டியதை அடுத்து  மணமகன் தனது திருமணத்தில் இருந்து ஓடியதாக கூறப்படுகிறது. அச்சுறுத்தலால் பயந்துபோன நவீன் தனது காதலியைப் பார்க்க தனது சொந்த திருமணத்தைத் தவிர்க்க விரும்பியதால் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. நவீனின் செயல் அவரது வருங்கால மனைவியான சிந்து மற்றும் சிந்துவின் குடும்பத்தினர் உட்பட அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. திருமணம் நின்றதன் காரணமாக மணமகளை சமாதானப்படுத்த முடியாத நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் திருமணத்திற்கு வந்தவர்களில்  ஒரு மணமகனைக் கண்டுபிடிக்க முடிவு செய்தனர். ஆச்சரியப்படும் விதமாக, அவர்கள் ஒரு பொருத்தமான நபரையும் கண்டுபிடித்துள்ளனர். அந்த நபரும் சிந்துவை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டார். அவரது பெயர் சந்திரப்பா. 

திருமண விழாவில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் பார்த்த பின்பு மணமகள் சிந்துவை மணமுடிக்க ஒப்புக்கொண்டார். அதேபோல குடும்ப உறுப்பினர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டு தம்பதியினரை ஆசீர்வதித்தனர். சந்திரப்பா தொழில் ரீதியாக பிஎம்டிசி நடத்துனராக (BMTC conductor) பணிபுரிந்து வருகிறார் என்று அறிக்கையில் தகவல் கூறப்படுகிறது. திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு வரை நவீன் மற்றும் சிந்து இருவரும் திருமண சடங்குகளை சந்தோசமாக அனுபவித்து வந்ததாகவும், போட்டோ சூட் என எல்லாம் நன்றாகவே இருந்தது என்றும் திருமண விழாவில் பங்கேற்ற நபர்கள் கூறியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவத்தை நெட்டிசன்கள் சந்திப்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக, கர்நாடகாவின் கர்கலாவில் இதேபோன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கும் மணமகன் தனது திருமண நாளின் போது ஓடிவிட்டதாக தெரிகிறது. இது குறித்து, டைஜிவேர்ல்ட்.காம்( Daijiworld.com) வெளியிட்ட அறிக்கையின்படி, மணமகன் திருமணத்திற்கு முந்தைய நாளில் அனைத்து முன்கூட்டிய சடங்குகளையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்ததாக கூறப்படுகிறது. திருமண நாளன்று காலை வரை அவர் திருமண இடத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பின்னர் அந்த இடத்திலிருந்து காணாமல் போனார். மணமகனின் குடும்பத்தினரும் நண்பர்களும் மணமகனுடன் தப்பி ஓடிவிட்டனர். மணமகன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாண்மை ஆலோசகராக இருந்ததாகவும், அமெரிக்காவில் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகிறது. மணமகள் எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி. படிப்பை முடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் டிசம்பர் 10-ஆம் தேதி நடக்க திட்டமிடப்பட்ட அவர்களின் திருமணத்தில் இருந்து மணமகன் தப்பி ஓடியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: