முகப்பு /செய்தி /இந்தியா / ஓசூர் டூ பெங்களூர் மெட்ரோ திட்டம்.. தமிழ்நாடு அரசிற்கு கடிதம் எழுதியுள்ள கர்நாடகா..

ஓசூர் டூ பெங்களூர் மெட்ரோ திட்டம்.. தமிழ்நாடு அரசிற்கு கடிதம் எழுதியுள்ள கர்நாடகா..

மெட்ரோ

மெட்ரோ

பொம்மசந்திரா முதல் ஓசூர் வரை 10 கிலோமீட்டர் தூரத்திற்கான மெட்ரோ ரயில் பாதையை அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள உள்ளது.

  • Last Updated :
  • Bangalore, India

தமிழ்நாடு, கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.

பெங்களூருவில் இருந்து கர்நாடக - தமிழ்நாடு எல்லையில் உள்ள பொம்ம சந்திரா பகுதி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டப் பணிகளை கர்நாடக அரசு அமைத்து வருகிறது.

இந்நிலையில், பொம்மசந்திரா முதல் ஓசூர் வரை 10 கிலோமீட்டர் தூரத்திற்கான மெட்ரோ ரயில் பாதையை அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள உள்ளது.

அரசு கேபிளில் இலவச சேனல்.. கால்பந்து ரசிகர்களுக்காக அமைச்சரின் சூப்பர் அறிவிப்பு 

இந்நிலையில், பெங்களூரு மெட்ரோ வழித்தடத்துடன், ஓசூர் நகரத்தை இணைக்கும் திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கைகளை விரைந்து தயார் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு கர்நாடகா அரசு கடிதம் எழுதியுள்ளது.

top videos
    First published:

    Tags: Bangalore, Hosur, Karnataka, Metro Train