• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகள் வரும் நவம்பர் 8 ஆம் தேதியில் இருந்து தொடங்கும் - அறிவிப்பு வெளியிட்டது கர்நாடகா அரசு

எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகள் வரும் நவம்பர் 8 ஆம் தேதியில் இருந்து தொடங்கும் - அறிவிப்பு வெளியிட்டது கர்நாடகா அரசு

எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகள் வரும் நவம்பர் 8 ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.

  • Share this:
    18 மாதங்களுக்கு பின்னர் நவம்பர் 8ம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் (எல்கேஜி, யுகேஜி) திறக்கப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, அங்கன்வாடி மையங்களும் அதே நாளில் திறக்கப்படும் என மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அறிவித்திருந்தது.

    கர்நாடகாவில் முதல்வராக இருந்த பி.எஸ்.எடியூரப்பாவுக்குப் பதிலாக, ஜூலை 28ம் தேதியன்று பசவராஜ் பொம்மை மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

    இந்நிலையில், தனது அரசு பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நிர்வாகத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதில் இதுவரை எடுக்கப்பட்ட முடிவுகள் திருப்தி அளிப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிடிஐ வெளியிட்டுள்ள தகவலில், நிர்வாகத்தை சரியான திசையில் கொண்டு செல்வது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளில் தான் திருப்தி அடைவதாக தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சரவையை உடனடியாக விரிவுபடுத்துவது தொடர்பான எந்த விவாதமும் இல்லை என்றும் அவர் நிராகரித்துள்ளார்.

    முன்னதாக, கர்நாடக அரசு டீசலுக்கான வாட் வரியை ரூ.7 குறைத்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. மேலும் விற்பனை வரி எனப்படும் சேல்ஸ் டாக்ஸையும் குறைப்பு செய்திருக்கிறது. இதன் அடிப்படையில் மொத்தம் டீசல் விலையில் மட்டும் ரூ. 19.4 7 குறைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து கர்நாடகாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 85.03 க்கு விற்பனையாகிறது. இதே போன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 100.63 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெட்ரோல் மீதான விற்பனை வரி 35 சதவீதத்தில் இருந்து 25.2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. டீசலுக்கான விற்பனை வரி 24 சதவீதத்திலிருந்து 14.3 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து எதிர்க்கட்சிகள் நேற்றுவரை நமக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் பிரதமர் மோடி ஒரே அறிவிப்பில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து நடவடிக்கை எடுத்து விட்டார். இதனால் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற்றுள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களைப் போன்று எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் வாட் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: