கர்நாடகாவில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் - துணை முதல்வர் உறுதி

அஷ்வத் நாராயண்

கர்நாடகாவில் லவ் ஜிகாத்துக்கு எதிராகவும், பசுவதைக்கு எதிராகவும் மசோதா கொண்டுவரப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்துப் பெண்களை மதம் மாற்றம் நோக்கத்துடன் இஸ்லாமிய ஆண்கள் காதலித்து திருமணம் செய்கிறார்கள் என்று பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்பு தொடர்ச்சியாக குற்றம் சாட்டிவருகின்றனர். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசு லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவந்துள்ளது. அந்தச் சட்டப்படி, கட்டாயப்படுத்தி மதம் மாற்றினால் 10 ஆண்டுகள் சிறை மற்றும் திருமணத்துக்காக மதம் மாறுவது செல்லாது என்பது அடங்கும். இந்தச் சட்டத்துக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தநிலையில் இந்தச் சட்டம் உத்தரப் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

  இந்தநிலையில், பேசிய கர்நாடக மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராயன், ‘லவ் ஜிகாத் மற்றும் பசுவைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரும் நடைமுறையில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. பல மாநிலங்கள் ஏற்கெனவே இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளன. நாங்கள் மாட்டிறைச்சி மற்றும் லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டம் கொண்டுவரும் நடைமுறையில் உள்ளோம்’ என்று தெரிவித்தார்.

  மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுக்கு கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும்’ என்று தெரிவித்தார்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Karthick S
  First published: