Home /News /national /

மும்பையை தொடர்ந்து பெங்களூரிலும் இன்று மாலை முதல் 144 தடை விதிப்பு!

மும்பையை தொடர்ந்து பெங்களூரிலும் இன்று மாலை முதல் 144 தடை விதிப்பு!

புத்தாண்டையொட்டி மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பதால் அதை தடுப்பதற்காக இன்று மாலை முதல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.

புத்தாண்டையொட்டி மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பதால் அதை தடுப்பதற்காக இன்று மாலை முதல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.

புத்தாண்டையொட்டி மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பதால் அதை தடுப்பதற்காக இன்று மாலை முதல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.

    மும்பையை தொடர்ந்து பெங்களூரிலும் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 5 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மும்பையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ஜனவரி 15-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் ஊரங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 15-ம் தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாலை 5 மணி வரை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு போடப்படும். அதன்பின்னர், தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த நடவடிக்கையின் அடிப்படையில் மும்பை மாநகரம் குறைந்தது 12 மணி நேரத்திற்கு ஊரடங்கில் நீடிக்கும். இதேபோன்று மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க :  டெல்லியில் அமலானது மஞ்சள் எச்சரிக்கை - பள்ளி, ஜிம், திரையரங்குகள் மூடப்பட்டன!

    இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், 'மும்பையில் கொரோனா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரம் புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டால் நிலைமை மோசமடைய வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மனித உயிர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக இந்த தவிர்க்க முடியாத நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மும்பையை தொடர்ந்து பெங்களூரிலும் இன்று மாலை முதல் நாளை காலை வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டையொட்டி மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பதால் அதை தடுப்பதற்காக இன்று மாலை முதல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.

    இதுதொடர்பான உத்தரவில், பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பொது இடங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க :   லாக்டவுன் விதிமீறியவர்களை துப்பாக்கி முனையில் ஊர்வலம் அழைத்துச்சென்று அவமதித்த சீன போலீசார்

    எனினும், குடியிருப்பு வளாகங்கள் மற்றும் தனியார் கிளப்புகளில் உள்ள வீட்டுக் கொண்டாட்டங்கள், எந்த சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யாமல் தங்கள் குடியிருப்பு உறுப்பினர்களுடன் நடத்தப்படலாம் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    ஹோட்டல்கள், மால்கள், உணவகங்கள், கிளப்புகள் அல்லது அதுபோன்ற எந்தவொரு நிறுவனமும் நகரத்தில் எந்த சிறப்பு DJ, நிகழ்வுகள் அல்லது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யக்கூடாது. எனினும், கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி அவர்கள் தங்கள் வழக்கமான வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே, கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர் கூறும்போது, மாநிலத்தில் ஒமைக்ரான் வேறுபாட்டால் 5 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த ஐந்து புதிய பாதிப்புகளில், ஒருவர் அமெரிக்காவில் இருந்து பயணம் செய்தவர், மற்றொருவர் அமெரிக்காவில் இருந்து கத்தார் வழியாக பயணம் செய்தவர், ஒருவர் துபாயில் இருந்து திரும்பியவர், ஒருவர் கானாவிலிருந்து தோஹா வழியாக வந்தவர் மற்றும் ஒருவர் மும்பையில் இருந்து வந்தவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Bangalore, Bengaluru

    அடுத்த செய்தி