தமிழக அரசின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்ப்போம் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். காவிரி ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய நதிகளான கிருஷ்ணா மற்றும் காவிரி நதிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, நீதிமன்றத்தில் நதி நீர் பங்கீடு தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறினார்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு ஜனவரி இறுதியில் மேலும் ஒரு கூட்டத்தை நடத்திய பிறகு பிப்ரவரி முதல் வாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தாங்கள் எதிர்ப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் காவிரி ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிநீர் தேவைக்கு தண்ணீர் தரமாட்டோம் எனக் கூறும் கர்நாடக அரசின் செயல் மனிதாபிமானமற்றது என்று கூறியுள்ளார்.
Also read... 5 மாநில தேர்தல்: பேரணி, பிரசாரத்திற்கான தடை ஜனவரி 31வரை நீட்டிப்பு
சட்டப்பூர்வமாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் ஒகேனக்கல் 2-வது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தும் உரிமை தமிழகத்திற்கு உள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடகத்திற்கு நினைவுபடுத்தியுள்ள துரைமுருகன், இந்திய மற்றும் தமிழ்நாடு நீர்வளக் கொள்கையின்படி குடிநீர் தேவைக்குத்தான் முதலிடம் கொடுக்கப்படும் எனவும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Duraimurugan, Karnataka