முகப்பு /செய்தி /இந்தியா / அரசு ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு அறிவிப்பு... போராட்டத்தை வாபஸ் வாங்கிய கர்நாடக அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு அறிவிப்பு... போராட்டத்தை வாபஸ் வாங்கிய கர்நாடக அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்கள்

கர்நாடகாவில் அரசு ஊழியர்களின் போராட்டத்தையடுத்து 17 சதவீத ஊதிய உயர்வை அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் சங்கம் இன்று (மார்ச் 1) ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் பசவராஜ் பொம்மை, அடிப்படை ஊதியத்தில் 17 சதவீதம் உயர்வை அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளனர்.

அரசு ஊழியர் சங்கத் தலைவர் சி.எஸ்.ஷடாக்ஷரி, 7வது ஊதிய குழுவிடம் இடைக்கால அறிக்கை பெற்று 40 சதவீத ஊதிய உயர்வு மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்திருந்தார். தற்போது அரசு அடிப்படை ஊதியத்தில் 17 சதவீத ஊதிய உயர்த்தி வழங்குவதாக அறிவித்துள்ளது.

தற்போது அறிவித்துள்ள 17 சதவீதம் ஊதிய உயர்வு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி நடைமுறைப்படுத்த அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Also Read : இது நகரும் சொர்க்கம்.. 50 நாட்களில் 3,200 கிமீ தூரம் பயணம் செய்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல்!

அதனைக்குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை, நிதித் துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி குழு அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். குழுவின் பரிந்துரை பேரில் ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


First published:

Tags: Govt Employees Protest, Karnataka, Salary hike