தமிழகத்தில் இருந்து வருவோருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் - கர்நாடக அரசு

கொரோனா பரிசோதனை

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்பது கார், பேருந்து, ரயில், விமானம் மூலம் வரும் அனைவருக்கும் பொருந்தும்.

 • Share this:
  தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு வருவோருக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் அந்த மாநில எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இரு மாநிலங்களை ஒட்டியுள்ள 8 மாவட்டங்களில் இரவு நேர மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  தமிழகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும். அந்த சான்றிதழ் 72 மணி நேரத்துக்கு முன்பாக சோதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

  இந்த நிபந்தனை கார், பேருந்து, ரயில், விமானம் மூலம் வரும் அனைவருக்கும் பொருந்தும். கொரோனா அறிகுறியுடன் கர்நாடகாவுக்கு வருபவர்கள் 7 முதல் 15 நாட்கள் கட்டாயம் அரசு விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் கடந்த 2 வாரங்களில் நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ளார்.

  பசவராஜ் பொம்மை


  Must Read : தமிழகத்தில் 7 மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல்

  அதன்படி, அதிகபட்சமாக கேரளா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாவட்டங்கள் உள்ளன. கேரளாவில் 11 மாவட்டங்களும், கர்நாடகத்தில் 5 மாவட்டங்களும் கடந்த 2 வாரங்களில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளத்தில் 1,77,091 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழகத்தில், ஒருநாள் கொரோனா பாதிப்பு  1,893 ஆக உள்ளது. தொற்று காரணமாக நேற்று 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: