ஹோம் /நியூஸ் /இந்தியா /

மேகதாது அணை கட்ட புதிய திட்ட மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடகா அரசு முடிவு

மேகதாது அணை கட்ட புதிய திட்ட மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடகா அரசு முடிவு

மேகதாது அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட திட்ட மதிப்பீட்டு அறிக்கையை வரும் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளது.

  • 1 minute read
  • Last Updated :

காவிரி நதிநீர் பங்கீடு குறித்து, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அந்த மாநில நீர்ப்பாசன துறை அமைச்சர் கோவிந்த கரஜோல் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். அப்போது, காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, தென்னிந்திய நதிகளை இணைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில், தங்களையும் மனுதாரராக சேர்க்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்ய முடிவுசெய்யப்பட்டது. மேகதாது பகுதியில் அணை கட்டுவது தொடர்பாக கரநாடக அரசு, கடந்த 2019ம் ஆண்டில் திட்ட மதிப்பீட்டு அறிக்கையை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துக்கு தாக்கல் செய்தது. ஆனால், போதிய தரவுகள் இல்லை என்று கூறி, இதனை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் திருப்பி அனுப்பியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து, புதிய திருத்தப்பட்ட திட்ட மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்கும் பணிகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த சூழலில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 31-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு முன்னதாக, திருத்தப்பட்ட மேகதாது திட்ட மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்யவும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

First published: