காவிரியில் தண்ணீரைத் திறந்துவிடுவதற்கு கர்நாடக அரசு உத்தரவு!

காவிரியில் தண்ணீரைத் திறந்துவிடுவதற்கு கர்நாடக அரசு உத்தரவு!
குமாரசாமி
  • News18
  • Last Updated: July 9, 2019, 6:40 PM IST
  • Share this:
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீரைத் திறுந்துவிடுவதற்கு கர்நாடகா முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடாகாவிலிருந்து தமிழகம் நோக்கி பாயும் காவிரி ஆற்றின் நீரைப் பெறுவது தொடர்பான பிரச்னை இரு மாநிலங்களுக்கும் இடையில் பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. கர்நாடாகவில் எந்த அரசு அமைந்தாலும், தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.

காவிரி நீரை சரியாக வழங்குவதற்கு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் உத்தரவுப்படி, ஜூன், ஜூலை மாதத்துக்கான தண்ணீரைத் திறந்து விட வேண்டிய நிலையில் கர்நாடகா அரசு உள்ளது. ஆனால், தண்ணீர் இல்லை என்று காரணத்தைக் குறிப்பிட்டு காவிரியில் தண்ணீரைத் திறக்காமல் இருந்து வந்தது கர்நாடகா அரசு.


இந்தநிலையில், தமிழக, கர்நாடகா மாநில விவசாயிகள் பயன்பெறும் வகையில், காவிரி நீரைத் திறந்துவிடுவதற்கு அம்மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

Also see:

First published: July 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading