ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Rahul Gandhi : ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்பதற்காக, அவரது தாயாரும், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவருமான சோனியா காந்தி மைசூரு வந்து சேர்ந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karnataka, India

  இந்தியாவிலேயே மிகவும் ஊழல் மிகுந்த அரசு கர்நாடக பாஜக அரசுதான் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

  இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் கன்னியாகுமரியில் தொடங்கியது. பின்னர் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களிலும் ராகுல்காந்தி நடைபயணத்தைத் தொடர்ந்தார்.

  இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் ராகுல்காந்தி பங்கேற்ற யாத்திரைக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுல் காந்தி, தற்போது கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ளார். அங்குள்ள மடத்துக்கு சென்ற அவர், ஸ்ரீசிவராத்ரி தேசிகேந்திர சுவாமியை சந்தித்தார். பின்னர் அங்குள்ள மசூதி மற்றும் தேவாலயத்துக்கும் சென்றார்.

  இதையடுத்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, கர்நாடக அரசு ஒப்பந்தக்காரர்களிடமிருந்து 40 விழுக்காடு கமிஷன் பெறுவதாகவும், இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்தியாவிலேயே மிகவும் ஊழல் மிகுந்த அரசு கர்நாடக பாஜக அரசுதான் என்றும் குற்றம்சாட்டினார்.

  Also Read: ராகுல் காந்தியுடன் யாத்திரையில் பங்கேற்க கர்நாடகாவுக்கு வந்த சோனியா காந்தி

  இதனிடையே ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்பதற்காக, அவரது தாயாரும், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவருமான சோனியா காந்தி மைசூரு வந்து சேர்ந்தார். மாண்டியாவில் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் பேரணியில் அவர் ராகுல் காந்தியுடன் இணைந்து நடைபயணம் மேற்கொள்கிறார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Congress, Rahul gandhi, Sonia Gandhi