18 வயதுக்கு குறைவான நபர்களுக்கு ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்களை விற்கக் கூடாது என கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்ததாக தகவல்கள் சில நாள்களாக பரவின. இது தொடர்பாக கர்நாடக அரசு தற்போது விளக்கம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநில கல்வித்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெங்களூரு நகரில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களின் பைகளில் சோதனை நடத்தியபோது அதிர்ச்சியடைந்தனர்.
சோதனையில் 8, 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் இருந்து செல்போன்கள் மட்டுமல்லாது, ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், லைட்டர்கள், சிகரெட்டுகள் ஆகியவை பிடிப்பட்டன. 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் ஆணுறை, கருத்தடை சாதனங்களை பயன்படுத்தும் சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கர்நாடக மருந்துகள் கட்டுப்பாட்டு துறை 18 வயது குறைவானவர்களுக்கு ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், வலிநிவாரணி மருந்துகள் போன்றவற்றை விற்க தடை விதித்து சுற்றறிக்கை வெளியிட்டதுள்ளதாக செய்திகள் பரவின. சிறார்களுக்கு இவ்வாறு தடை விதிப்பதன் மூலம், அவர்கள் மேலும் தவறான பாதைக்கு செல்லக்கூடும் என்ற ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். சிறார்கள் இடையே எதிர்பாராத கருத்தரிப்பு, பாலியல் சார்ந்த நோய் பரவல் போன்றவை ஏற்படலாம். எனவே, கருத்தடைக்கான பாதுகாப்பு சாதனங்களுக்கு தடை விதிப்பது முறையல்ல என எச்சரித்தனர்.
இதையும் படிங்க: ''பாஜகவில் சேருங்கள் இல்லையென்றால் புல்டோசர் தான்'' அமைச்சர் சர்ச்சை பேச்சால் பரபரப்பு
இந்நிலையில், விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு தரப்பு விளக்கம் தெரிவித்துள்ளது.நாங்கள் தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. அதேவேளை, மருந்து விற்பனை செய்பவர்கள் சிறார்களுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும். யார் வாங்க வேண்டும் என்பது குறித்து உரிய விளக்கம் தர வேண்டும் என்பதையே அறிவுறுத்தியுள்ளோம் என்றுள்ளது.எனவே, சிறார்கள் ஆணுறை வாங்க தடை ஏதும் விதிக்கவில்லை என கர்நாடக அரசு கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bengaluru, Condom, Contraceptive, Karnataka