முகப்பு /செய்தி /இந்தியா / அடுத்த அபாயம்? கர்நாடகாவில் சிறுமிக்கு ஜிகா வைரஸ்.. பரபரக்கும் சுகாதாரத்துறை!

அடுத்த அபாயம்? கர்நாடகாவில் சிறுமிக்கு ஜிகா வைரஸ்.. பரபரக்கும் சுகாதாரத்துறை!

ஜிகா வைரஸ்

ஜிகா வைரஸ்

Zika Virus: ஜிகா வைரஸ் பரிசோதனைக்கு மாதிரிகளை அனுப்ப, மருத்துவமனைகள் நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடகா மாநிலத்தில் ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. சிறுமியோடு சேர்த்து மேலும் மூவருக்கு காய்ச்சல் இருந்ததால், இரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் சிறுமிக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ராய்ச்சூர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் சந்தேகத்திற்கிடமான தொற்று பாதிப்பு ஏதேனும் கண்டறியப்பட்டால், உடனே ஜிகா வைரஸ் பரிசோதனைக்கு மாதிரிகளை அனுப்ப, மருத்துவமனைகள் நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தில் வேறு யாருக்கும் இதுவரை புதிதாக ஜிகா வைரஸ் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் நிலைமையை அரசு எச்சரிக்கையுடன் கண்காணித்து வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.

இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐந்து வயது சிறுமிக்கு ஏற்பட்ட ஜிகா வைரஸ் தொற்றே, கர்நாடகாவில் முதல் பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும் நோய்த் தொற்றுடைய ஏடிஸ் கொசுவின் மூலம், ஜிகா வைரஸ் நோய் பரவுகிறது. இந்த வைரஸ் முதன்முதலில் 1947ல் உகாண்டாவில் கண்டறியப்பட்டது.

First published:

Tags: Zika Virus