Home /News /national /

சமூக வலைதளங்களில் வைரலாகும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் நடனம்...

சமூக வலைதளங்களில் வைரலாகும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் நடனம்...

சொந்த ஊரில் நேற்று நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்ற சித்தராமையா, பாரம்பரிய நடனத்தை ஆடி அனைவரையும் அசத்தினார்.

    கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் பாரம்பரிய நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் சித்தராமையா, கடந்த 2013 முதல் 2018 வரை கர்நாடக மாநில முதல்வராக இருந்தார். மைசூர் மாவட்டம் சித்தராமன ஹன்டி என்ற கிராமம்தான் அவரது சொந்த ஊராகும்.

    இந்நிலையில், சொந்த ஊரில் நேற்று நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்ற சித்தராமையா, பாரம்பரிய நடனத்தை ஆடி அனைவரையும் அசத்தினார். இந்த நடனக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தனது இளம் வயதில், பாரம்பரிய நடனக்குழுவில் சித்தராமையா உறுப்பினராக இருந்துள்ளார். வீடியோ வைரலானது குறித்து சித்தராமையா கூறுகையில், பலரைப் போன்று நான் எழுத்துப் பலகையில்  எழுதப்படிக்கவில்லை. எனது நடன ஆசிரியரின் உதவியால் நான் மண்ணில் எழுதிப் படித்தேன் என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க - ஆளும் கட்சி பிரமுகர் அழுத்தம்.. தனியார் பள்ளி நிர்வாகம் அட்டூழியம்.. மன வேதனை தாங்காமல் மாணவி தற்கொலை..

    சித்தராமையாவின் பெற்றோர் கல்வி கற்கவில்லை. அவர்கள் மகனை வீர மக்கள குணிதா என்ற பாரம்பரிய நடனக்குழுவில் சிறு வயதில் சேர்த்தனர்.

    இதையும் படிங்க - உ.பி முதல்வராக 2வது முறையாக இன்று மீண்டும் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்..

    தனது ஓய்வு நேரத்தில் நடன ஆசிரியர்களிடம் சித்தராமையா எழுதப்படிக்க கற்றுக் கொண்டுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Siddaramaiah

    அடுத்த செய்தி