#BREAKING | கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு - சபாநாயகர் அறிவிப்பு

Karnataka Political Crisis | சித்தராமையா மற்றும் குமாரசாமி ஆகிய இருவரும் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

#BREAKING | கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு - சபாநாயகர் அறிவிப்பு
கர்நாடக எம்எல்ஏக்கள் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: July 22, 2019, 11:09 AM IST
  • Share this:
கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் குழப்பமான அரசியல் சூழல் நடக்கும் நிலையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி, 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

சுயேட்சை எம்எல்ஏக்கள் நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த, தலைமை நீதிபதி அமர்வு, இதனை அவசர வழக்காக கருத முடியாது என்று கூறி ஒத்தி வைத்தது.


இதற்கிடையே, இன்று மாலை 6 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் நியூஸ் 18-க்கு தெரிவித்துள்ளார்.

சித்தராமையா மற்றும் குமாரசாமி ஆகிய இருவரும் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

Also Read: கர்நாடகாவில் அரசியல் குழப்பம் ஏன்? 

First published: July 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading