கர்நாடகா வெள்ளத்தில் வீட்டு மேற்கூரை மீது படுத்துகிடந்த 8 அடி முதலை - அதிரவைக்கும் வீடியோ

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் மழைநீரில் மிதக்கின்றன.

news18-tamil
Updated: August 12, 2019, 6:07 PM IST
கர்நாடகா வெள்ளத்தில் வீட்டு மேற்கூரை மீது படுத்துகிடந்த 8 அடி முதலை - அதிரவைக்கும் வீடியோ
வீட்டு மேற்கூரை மீது படுத்திருக்கும் முதலை
news18-tamil
Updated: August 12, 2019, 6:07 PM IST
கர்நாடாகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. பெல்காம் மாவட்டத்தில் பெரிய முதலை ஓன்று வீட்டின் மேற்கூரை மீது படுத்து உள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் வடக்கு மற்றும் கடலோர பகுதிகளில் கனமழை தொடந்து பெய்து வருகிறது.

கனமழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு போதிய உதவிகளைச் செய்ய மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவின் பேலகாவி மாவட்டம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. இதுவரை கர்நாடகத்தில் கனமழையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. குடகில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 5 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் மழைநீரில் மிதக்கின்றன. பெல்காம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் வீடுகள் மூழ்கியுள்ளன.இந்நிலையில் ரேபேக் பகுதியில் உள்ள வீட்டின் மீது முதலை ஒன்று அமர்ந்திருக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ள நீரில் முதலை செய்வதறியாது திணறிய நிலையில் இருந்தது. கனமழையில் வனவிலங்குகள் அடித்து வரப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.

Also Watch

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...