கொரோனா அச்சத்தால் ரூபாய் நோட்டுகளை சோப்பு போட்டு கழுவிய விவசாயி!

சமீபத்தில் வங்கி ஊழியர் ஒருவர், வாடிகையாளர் கொடுத்த  பணத்தை அயன் பாக்ஸில் வைத்து எடுத்த வீடியோவும் அனைவராலும் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா அச்சத்தால் ரூபாய் நோட்டுகளை சோப்பு போட்டு கழுவிய விவசாயி!
ரூபாய் நோட்டுகளை கழுவிய விவசாயி
  • Share this:
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் கொரோனா அச்சத்தால் விவசாயி ஒருவர் ரூபாய் நோட்டுகளை சோப்பு போட்டு கழுவும் வீடியோ வெளியாகி உள்ளது.

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் இதுவரை 3 பேருக்கு கொரோனாவால் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த மரனசகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் விளைந்த விவசாய பொருட்களை சந்தையில் விற்றார்.

அதம் மூலமாக தான் சம்பாதித்த பணத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறு கிண்ணத்தில் இருந்த சோப்பு தண்ணீரில் அலசியுள்ளார். இதில், 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரை இருந்தது. அந்த ரூபாய் நோட்டுகளை தண்ணீரில் அலசிய பின்பு வீட்டுக்கு எடுத்துச் சென்றார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.


சமீபத்தில் வங்கி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர் கொடுத்த  பணத்தை அயன் பாக்ஸில் வைத்து எடுத்த வீடியோவும் அனைவராலும் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading